News April 13, 2024

இபிஎஸ்சை நம்ப மக்கள் ஏமாளிகள் அல்ல : திமுக

image

சிஏஏ, புதிய வேளாண் சட்டம், உதய் மின் திட்டம் போன்ற மத்திய பாஜக அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த இபிஎஸ்ஸை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பாஜக கூறியவுடன் உடனே டெல்லிக்கு ஓடிச் சென்று ஆதரவு தந்தவர். பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ள இபிஎஸ்ஸின் செயலை இனியும் மக்கள் நம்ப ஏமாளிகள் அல்ல என விமர்சித்துள்ளது.

Similar News

News January 24, 2026

புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

குடியரசு தினத்தையொட்டி தற்போது பள்ளி மாணவர்கள் தொடர் விடுமுறையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஆகிய தாலுகாவை சேர்ந்த மாணவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, ஜன.28-ல் 3 தாலுகாவிலும் உள்ளூர் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்ய, பிப்.7-ம் தேதி பணிநாள் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News January 24, 2026

இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

image

மகளிர் உரிமைத்தொகை ₹1000 பெறும் பெண்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வேலைவாய்ப்பற்றோருக்கான மாத உதவித்தொகை திட்டத்தில் பயனாளியாக உள்ள பெண்கள், உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே, இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே உதவித்தொகை பெற முடியும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஏழை, எளிய குடும்ப பெண்கள், இதில் ஒன்றை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

News January 24, 2026

அதிமுகவாக மாறிவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனா

image

OPS தரப்பினர் திமுகவில் இணைந்து வரும் நிலையில், ‘திமுக உண்மையான அதிமுகவாக மாறிவிட்டது’ என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். எந்த கட்சியில் இருந்து யார் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கும் கோழி பிடிக்கும் கட்சியாக திமுக மாறிவிட்டதாக சாடிய அவர், 2026 தேர்தலுக்காக எத்தனை கூட்டணிகள் உருவானாலும், விஜய் இல்லாத ஒரு கூட்டணியை மக்கள் ஒருபோதும் தேர்வு செய்யமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!