News April 4, 2025
மக்கள் பிரச்னையை பேசக் கூடாதா? இபிஎஸ் கொந்தளிப்பு

பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் இபிஎஸ் உள்பட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் இபிஎஸ் பேசுகையில், பேரவையில் மக்கள் பிரச்னைகளைப் பேச அனுமதியில்லை. 10 நாள்களாக தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்தும் பேச அனுமதி மறுக்கப்பட்டது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சகித்துக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 10, 2025
தலைவர் பதவி: அண்ணாமலை, நயினாருக்கு சிக்கல்?

மாநிலத் தலைவர் தேர்தலுக்கான விருப்ப மனு அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள ஒரு விதி பேசுபொருளாகியுள்ளது. தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்கள், கட்சியில் 10 ஆண்டுகளாவது அடிப்படை உறுப்பினர்களாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும் கட்சியில் சேர்ந்து 10 ஆண்டுகள் ஆகாததால், இருவரும் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
News April 10, 2025
17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. மதுரை, திருச்சி, நெல்லை, குமரியில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, தி.மலை, திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசியில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது.
News April 10, 2025
எஸ். ராமகிருஷ்ணனுக்கு விருது

பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு 2025-ம் ஆண்டுக்கான ‘பாரதிய பாஷா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய துறையில் முக்கிய பங்கு ஆற்றியோருக்கு ஆண்டுதோறும் கொல்கத்தாவை சேர்ந்த ‘பாரதிய பாஷா’ பரிஷத் அமைப்பு விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில், எஸ். ராமகிருஷ்ணனுக்கு இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.1 லட்சம் காசோலையுடன் பரிசுக் கேடயமும் அளிக்கப்பட இருக்கிறது.