News May 16, 2024
கெஜ்ரிவால் சிறைக்கு சென்றதால் மக்கள் மகிழ்ச்சி

சிறைக்கு சென்றபின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனக் குழப்பத்தில் இருப்பதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், துடைப்பத்தை (ஆம் ஆத்மி சின்னம்) கையில் எடுத்த கெஜ்ரிவால் அதை வைத்து அன்னா ஹசாரேவின் கனவை துடைத்து விட்டார் என விமர்சித்துள்ளார். மேலும், மதுபானக் கொள்கை முறைகேட்டு வழக்கில் அவர் சிறைக்கு சென்ற பின் டெல்லி மக்கள் நிம்மதியாக இருந்தனர் என்றார்.
Similar News
News October 22, 2025
டிரம்புக்கு நன்றி கூறிய PM மோடி

USA அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக தீபாவளி வாழ்த்து தெரிவித்ததற்கு PM மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த X பதிவில், இந்த ஒளியின் திருவிழாவில், நம் இருபெரும் ஜனநாயக நாடுகளும் உலகிற்கு நம்பிக்கையை ஒளிர செய்யட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து நிற்போம் என்றும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், ரஷ்ய எண்ணெய் விவகாரம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
News October 22, 2025
கூட்டணி கணக்கை மாற்றும் அதிமுக

தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், EPS முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில், தீபாவளிக்கு திமுகவில் கொடுக்கப்பட்ட பரிசுகள் அக்கட்சியினரை உற்சாகமடைய செய்துள்ளதாக Ex அமைச்சர்கள் சிலர் கூறியுள்ளனர். இதனால், ADMK நிர்வாகிகளை உற்சாகமடைய செய்ய திட்டம் வகுக்கவும், TVK கூட்டணியை மட்டும் நம்பி இல்லாமல் நமது(ADMK) வாக்குகள் சிதறாமலும், அதிகரிக்கவும் நிர்வாகிகளுக்கு EPS அறிவுறுத்தினாராம்.
News October 22, 2025
ALERT! உங்கள் ஆதார் Misuse ஆகுதா?

உங்கள் ஆதாரை வேறு யாராவது உங்களுக்கு தெரியாமல் யூஸ் பண்றாங்களா என்பதை எளிதாக கண்காணிக்கலாம். ➤myAadhaar போர்ட்டலுக்கு செல்லுங்கள் ➤ஆதார் எண் & OTP-ஐ உள்ளிட்டு Login செய்யுங்கள் ➤அதில் Authentication history ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்கள் ➤இதில் நீங்கள் எங்கெல்லாம் உங்கள் ஆதாரை யூஸ் பண்ணியிருக்கீங்க என்பதை தெரிஞ்சிக்கலாம் ➤முறைகேடு நடந்திருப்பதாக உணர்ந்தால் 1947 என்ற எண்ணில் புகாரளியுங்கள். SHARE.