News June 2, 2024
மோடி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்: முத்தரசன்

பிரதமரின் பரப்புரை மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாக சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சாதி, மத ரீதியான பிரச்னைகளை பிரதமர் பேசியதாக கூறிய அவர், இது எதுவும் பயன்பெறாத நிலையில் தானே கடவுள் என மோடி கூறி வருவதாகவும் விமர்சித்தார். வடக்கு, தெற்கு பிரிவினை கருத்துக்களை மோடி பேசியதாகவும், அதற்கு மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் கூறினார்.
Similar News
News September 20, 2025
ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுத்த விஜய்

மீனவ நண்பனாக இருக்கும் இந்த விஜய்யின் அன்பு வணக்கங்கள் என்று நாகை புத்தூர் ரவுண்டனாவில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார். இவர்கள் (திமுக) ஆண்டது பத்தாதா? என கேள்வி எழுப்பிய விஜய், நான் களத்திற்கு வருவது புதிது அல்ல என்றும் பேசினார். தமிழக மீனவர்களை தடுப்பது எப்போது நிற்கும்? தாய்ப்பாசம் கொடுத்த தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களின் கனவுகளும், வாழ்க்கையும் ரொம்ப முக்கியம் என்றும் கூறினார்.
News September 20, 2025
அழகாக இருப்பதாலேயே வேலை கிடைக்கவில்லை!

அழகாய் இருக்கும் காரணத்தால் இளம்பெண் ஒருவருக்கு வேலை கிடைக்காமல் போயுள்ளது. பிரேசிலை சேர்ந்த அலே கௌச்சா(21) என்ற பெண், Caretaker பணிகளுக்கு விண்ணப்பித்து 50 இன்டர்வியூக்களில் நிராகரிக்கப்பட்டுள்ளார். வீட்டில் உள்ள ஆண்களுடன் தகாத உறவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் பேரில் இவர் நிராகரிப்பட்டுள்ளார். இதனால், வேறுவழியின்றி தான் Adult Content Creator-ஆக மாறிவிட்டதாகவும் கௌச்சா குறிப்பிட்டுள்ளார்.
News September 20, 2025
மீண்டும் நிபந்தனைகளை மீறிய விஜய்

தவெக தொண்டர்களின் ஆரவாரத்தால் கடந்த முறையே திருச்சியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி, 3 மணி நேரத்திற்கு பிறகு விஜய் பரப்புரை செய்தார். இந்நிலையில், இன்றும் நாகையில் மதியம் 12:25 – 1:00 மணிவரை பேச நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 1:35 மணிக்கே அவர் பேச தொடங்கியது பேசுபொருளாகியுள்ளது. தொண்டர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில், கட்சியின் தலைவருக்கே பொறுப்பு என்று சென்னை HC கூறியிருந்தது.