News January 8, 2025

34,000 பேரின் பென்ஷன் நிறுத்தம்

image

மின்வாரியத்தில் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்காத 34,000 பேரின் பென்ஷன் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. TN மின் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) உள்ள 92,000 ஓய்வூதியதாரர்களில், 2024 ஜூலை-டிசம்பர் வரையில் 58,000 ஓய்வூதியதாரர்கள் மட்டுமே 2024ஆம் ஆண்டுக்கான Life Certificate சமர்ப்பித்துப் புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள 34000 பேர் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Similar News

News January 19, 2026

சமூக நலத்திட்டங்களை அடியோடு அழிக்கும் பாஜக: CPI

image

EPS யாருடனிருந்து தேர்தல் வாக்குறுதியை அறிவிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் என CPI வீரபாண்டியன் கூறியுள்ளார். இலவசங்களே கூடாது என PM மோடி சொல்வதாக கூறிய அவர், நலத்திட்டங்களை அடியோடு அழிக்கும் பாஜகவுடன் நின்றுகொண்டு, EPS சொல்லும் வாக்குறுதிகளை எப்படி நம்பமுடியும் என கேட்டுள்ளார். மேலும், வாக்குறுதி அளிப்பது இயல்புதான் எனவும் இந்த காரணங்களால் EPS-ன் வாக்குறுதியை ஏற்க இயலாது என்றும் பேசியுள்ளார்.

News January 19, 2026

உலக சந்தையில் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்!

image

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $83 உயர்ந்து $4,673-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $5 உயர்ந்து $93.75 ஆக உள்ளது. இதனால், இன்று(ஜன.19) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும். ஈரான், வெனிசுலா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் சர்வதேச பிரச்னைகளே தங்கம் உயர்வுக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

News January 19, 2026

இனி ஜடேஜா வேண்டாம்..

image

NZ-க்கு எதிரான ODI தொடரில் ஜடேஜா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 3 போட்டிகளையும் சேர்த்து வெறும் 43 ரன்களை மட்டுமே அடித்த அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதனால், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள அவரை ODI அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என பலரும் கமெண்ட் செய்கின்றனர். மேலும், அவருக்கு பதிலாக அக்சர் படேலுக்கு வாய்ப்பளிக்கலாம் எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!