News October 26, 2025

நிலுவை வழக்குகளும்.. கோர்ட் விடுமுறைகளும்!

image

. செப்டம்பர் 2025 கணக்கின் படி, நாட்டில் 5.60 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். பொது சேவையில் உள்ள போலீஸ், ராணுவ வீரர்கள், டாக்டர்கள், ஊடகத்துறையினர் போன்றவர்கள் 365 நாளும் பணி செய்யும் நிலையில், நீதிமன்றங்கள் மட்டும் ஏன் 196 நாள்கள் மட்டுமே வேலை செய்கின்றன என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் அல்லவா.. நீங்க என்ன சொல்றீங்க?

Similar News

News January 20, 2026

மீண்டும் கர்ப்பமானார் நடிகை பிரியா அட்லீ ❤️❤️ PHOTOS

image

இந்திய திரையுலகில் பேமஸ் கப்பிளாக இருக்கும் இயக்குநர் அட்லீ – நடிகை பிரியா தங்களுடைய 2-வது குழந்தையை வரவேற்க தயாராக உள்ளனர். காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு, 2023-ல் முதல் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மீண்டும் கர்ப்பமாகிய தகவலை இன்ஸ்டாவில் பகிர்ந்த பிரியா, தங்கள் குடும்பத்திற்கு புதிதாக ஒருவர் வரப்போகிறார், இதனால் தங்கள் வீடும் குடும்பமும் அழகாக மாறப்போகிறது என பதிவிட்டுள்ளார்.

News January 20, 2026

Ro-Ko-வுக்கு ஷாக் கொடுக்கவுள்ள BCCI?

image

A+,A,B,C போன்ற பிரிவுகளின் கீழ் வீரர்களுக்கு BCCI சம்பளம் வழங்கி வருகிறது. தற்போது, A+ பிரிவை நீக்க BCCI ஆலோசித்து வருவதால், ரோஹித் & கோலி ஆகியோர் B பிரிவுக்கு தள்ளப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்திய அணிக்காக அனைத்து ஃபார்மட்டிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே A பிரிவில் இடமளிக்கப்படும். இன்னும் ஓரிரு நாள்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

News January 20, 2026

தேசிய கீதம் இசைப்பதில் என்ன பிரச்னை? வானதி

image

கவர்னர் விவகாரத்தில் திமுக அரசு ஆதிக்க மனப்பான்மையையோடு நடப்பதாக வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தேசிய கீதம் இசைப்பதில் திமுகவுக்கு ஏன் பிடிவாதம் என கேட்ட அவர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கும், தேசிய கீதத்துக்கும் சம மரியாதை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க திட்டமிட்டே முயற்சிகள் நடப்பதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!