News April 24, 2024
விராட் கோலிக்கு அபராதம்

KKR அணிக்கு எதிரான போட்டியில் நடுவரிடம் கோபத்தை வெளிப்படுத்திய விராட் கோலிக்குப் போட்டித் தொகையில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தனது இடுப்புக்கு மேலே வந்த பந்தை அடித்து கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதற்கு நடுவர் அவுட் கொடுக்கவே, நோ பால் கேட்டு முறையிட்டார். ஆனால், கோலி கிரீசுக்கு வெளியே நின்றதால் நடுவர் நோ பால் கொடுக்க மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர் கோபத்துடன் வெளியேறினார்.
Similar News
News January 1, 2026
கிராம்பு உடன் எதை சாப்பிட்டால் என்ன பயன்?

கிராம்பு பல நூற்றாண்டுகளாக இயற்கை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராம்பு உடன் தேன், இஞ்சி, எலுமிச்சை, இலவங்கப்பட்டை, பால், புதினா உள்ளிட்ட பொருட்களை சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News January 1, 2026
வங்கதேசத்தில் மீண்டும் இந்து மீது தீ வைத்து தாக்குதல்

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தீ வைத்து கொல்லும் அளவுக்கான <<18714416>>தாக்குதல்கள்<<>> தொடர்வது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷரியாத்பூர் மாவட்டத்தில் கோகோன் தாஸ் என்ற 50 வயது நபரை மர்ம கும்பல் ஒன்று தாக்கி, அவர் மீது தீ வைத்துள்ளனர். அங்கிருந்த தப்பி ஓடிய அவர் குளத்தில் குதித்து உயிரை காப்பாற்றிக்கொண்டுள்ளார். படுகாயம் அடைந்த அவர் இப்போது ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
News January 1, 2026
தமிழகத்தில் பொங்கல் பரிசு.. அரசு முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மக்களுக்கு அரசியல் கட்சியினர் டோக்கன் விநியோகம் செய்யக் கூடாது என கூட்டுறவுத் துறை எச்சரித்துள்ளது. எக்காரணத்தை கொண்டும் ரேஷன் கடைகளை சாராத நபர்கள் பொங்கல் பரிசு டோக்கனை வழங்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு என CM ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.


