News April 5, 2025
அமைதி பாதை.. நக்சல்களுக்கு அமித்ஷா வேண்டுகோள்

ஆயுதங்களை கீழே போட்டு அமைதி பாதைக்கு திரும்பும்படி நக்சலைட் தீவிரவாதிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், என்கவுன்ட்டரில் நக்சல்கள் கொல்லப்படுவதை யாரும் விரும்பவில்லை என்றார். நக்சல் தீவிரவாதம் இல்லாத கிராமத்திற்கு வளர்ச்சிப் பணிக்காக ரூ.1 கோடி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 12, 2025
திமுகவின் பலம் எது? மனம் திறந்த உதயநிதி!

திருவண்ணாமலை கலைஞர் திடலில் நாளை மறுநாள் திமுக வடக்கு மண்டல இளைஞர் அணி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 1,30,000 இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும்,
CM ஸ்டாலின் சிறப்புரை ஆற்றவிருப்பதாகவும் DCM உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். 75 ஆண்டுகள் கடந்து அரசியலில் பயணிக்கும் திமுகவுக்கு இளைஞரணி பக்கபலமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News December 12, 2025
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்!

தலைப்பே தலைசுற்ற வைக்கிறதல்லவா? 2021-ல் ஹாலிமா சிஸ்ஸே(29) என்ற பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி நாட்டை சேர்ந்த ஹாலிமாவுக்கு, சிஸேரியன் மூலம் பிறந்த 5 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் நலமாக உள்ளனர். ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறப்பது, மருத்துவ வரலாற்றிலேயே மிகவும் அரிதான விஷயம் எனவும் கூறப்படுகிறது.
News December 12, 2025
BREAKING: ஓய்வு முடிவை வாபஸ் பெற்ற வினேஷ் போகத்

பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். அதே வெறியுடன் மீண்டும் களத்திற்கு திரும்ப உள்ளதாக உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கின்(2024) இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்திருந்தார். தற்போது காங்கிரஸில் இணைந்த அவர் ஹரியானாவின் ஜூலானா தொகுதி MLA-வாக உள்ளார்.


