News March 31, 2025
சமாதான முயற்சியா? பாஜகவில் சேர்க்க முயற்சியா?

இபிஎஸ் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்தபிறகு அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனும் டெல்லி சென்று வந்தார். இதையடுத்து அதிமுகவில் இபிஎஸ்க்கும், அவருக்கும் நிலவும் கருத்து வேறுபாட்டை களைந்து சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாஜகவில் செங்கோட்டையனை சேர்க்க முயற்சி நடப்பதாக புதுத்தகவல் வெளியாகியுள்ளது. இதில் எது உண்மை?
Similar News
News January 16, 2026
ஒரே நாளில் மளமளவென குறைந்தது

பொங்கல் விடுமுறையான இன்று (ஜன.16) தங்கம் விலை முதல்முறையாக குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹480 குறைந்து ₹1,05,840-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி 1 கிராம் 4 குறைந்து ₹306-க்கும், கிலோ வெள்ளி ₹3,06,000-க்கும் விற்பனையாகிறது. எனவே, பொங்கல் சீர், சுப முகூர்த்த தினத்திற்கு நகைகள் வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News January 16, 2026
திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்குமா?

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பள்ளிகளுக்கு ஜன.14 – 18 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில், சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக திங்கள்கிழமை அன்றும் விடுமுறை அளிக்க பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை ஏற்படும் கூட்ட நெரிசலில் சிரமத்தை சந்திக்காமல் இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
News January 16, 2026
தாக்கரே சகோதரர்களுக்கு ‘ரசமலாய்’ அனுப்பிய பாஜக

மும்பை மாநகராட்சி தேர்தலில் <<18872687>>’மஹாயுதி’<<>> கூட்டணி 120-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், பாஜக தலைவர் தஜிந்தர் பக்கா, உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேவுக்கு ஆன்லைனில் ‘ரசமலாய்’ ஆர்டர் செய்து அனுப்பியுள்ளார். அண்ணாமலையை <<18833309>>ரசமலாய்<<>> என ராஜ் தாக்கரே விமர்சித்திருந்த நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக ‘இந்த இனிப்பை நீங்கள் ரசிப்பீர்கள்’ எனக்கூறி அனுப்பி வைத்துள்ளார்.


