News May 26, 2024

உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிக்கு சீக்கிரம் வர வேண்டும்

image

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளன. இதையொட்டி, பள்ளிக்கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்தவகையில், உடற்கல்வி ஆசிரியர்கள் வேலை நேரத்திற்கு 30 நிமிடம் முன்பாகவே பள்ளிக்கு வந்து மாணவர் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News March 13, 2026

தவெகவுடன் கூட்டணியா? ரங்கசாமி கூறினார்

image

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதனால், தவெகவுடன் அக்கட்சி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு, அவ்வாறு தவெகவுடன் பேச்சுவார்த்தை நடந்தால் முதலிலேயே கூறிவிடுகிறேன் என்று புதுவை CM ரங்கசாமி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நன்றாக நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 13, 2026

OBC கிரீமி லேயர் ஒதுக்கீட்டில் SC முக்கிய தீர்ப்பு

image

பிற்படுத்தப்பட்டோருக்கான(OBC) கிரீமி லேயர் நிலையை பெற்றோரின் வருமானத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது என்று SC தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை, சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், பெற்றோரின் வருமானத்தை காரணம் காட்டி பணி நியமனம் மறுக்கப்பட்டு வந்தவர்களுக்கு இது நிம்மதியை அளித்துள்ளது. அவர்களின் நியமனங்களை மறுத்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்களை SC தள்ளுபடி செய்துள்ளது.

News March 13, 2026

OBC Creamy Layer & Non- Creamy Layer என்றால் என்ன?

image

OBC பிரிவினருக்கான மத்திய அரசின் இடஒதுக்கீட்டில் Creamy Layer/Non-Creamy Layer என 2 அடுக்குகள் உள்ளன. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சியடைந்து ஆண்டு வருமானம் ₹8 Lak-க்கு மேல் உள்ளவர்கள் Creamy Layer-ல் வருவார்கள். அவர்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது. ஆண்டுக்கு ₹8 Lak-க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் Non-Creamy Layer-ல் வருவார்கள். இவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

error: Content is protected !!