News December 6, 2024
ஹைப்ரிட் மாடலுக்கு பணிந்த PCB!

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை யுஏஇ மற்றும் பாகிஸ்தானில் நடத்த PCB சம்மதம் தெரிவித்துள்ளதாக ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இந்தியாவின் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளது. மேலும் இந்த ஹைபிரிட் முறை 2027ஆம் ஆண்டு வரை நடைபெறும் அனைத்து ஐசிசி தொடரிலும் இது கடைபிடிக்கப்பட உள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 24, 2025
திருவாரூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!
News August 24, 2025
வாக்குத் திருட்டு.. பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

எங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்றால் ஜம்மு & காஷ்மீரில் இருந்து கூட மக்களை அழைத்து வருவோம் என கேரள BJP துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக, வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், திருச்சூர் லோக் சபா தேர்தலில் சட்டவிரோதமாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, இவ்வாறு அவர் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
News August 24, 2025
யூத அரசுக்கு எதிரான நவீன அவதூறு: இஸ்ரேல் தாக்கு

காசாவுக்குள் மனிதநேய உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதாக ஐ.நாவின் IPC அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இது முழுக்க முழுக்க பொய் என்றும், யூத அரசுக்கு எதிரான நவீன ரத்தம் மிகுந்த அவதூறு என்றும் இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு காட்டமாக கூறியுள்ளார். காசாவில் உள்ள ஒருவருக்கு ஒரு டன் வீதம் 2 மில்லியன் டன் உதவிப் பொருள்களை அனுமதித்துள்ளதாகவும் அவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.