News May 8, 2025

PBKS vs DC: மழையால் தாமதமாகும் ஆட்டம்

image

PBKS மற்றும் DC அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. மாலை 7:00-க்கு டாஸ் போட வேண்டிய நிலையில், இதுவரை டாஸ் சுண்டப்படவில்லை. இந்த ஆட்டத்தில் வென்றால், முதல் அணியாக PBKS அணி, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெல்லும்? கமென்ட்டில் சொல்லுங்கள்.

Similar News

News November 5, 2025

ஏன் ஒரு மெடல் கூட கொடுக்கல?

image

இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு நடப்பது அநீதி என நெட்டிசன்கள் குரலெழுப்பி வருகின்றனர். WC தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் காயமடைந்த அவருக்கு, ஏன் எந்தவொரு மெடலும் வழங்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. 308 ரன்கள் அடித்து, தொடரில் அதிக ரன்கள் எடுத்த 2-வது இந்திய வீராங்கனையாக இருந்தும், அவரை புறக்கணித்தது சரியா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News November 5, 2025

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை: தங்கமணி

image

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை என போதை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாக தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார். செல்லுமிடங்களில் திமுக ஆட்சி எப்போது முடியும்; அதிமுக ஆட்சி எப்போது வரும் என மக்கள் கேட்கின்றனர் எனக் கூறிய அவர், அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்பதால் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என விமர்சித்தார். மேலும், 2 இன்ஜின் இருந்தால்தான் தமிழகம் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

நெஞ்சு சளி விரட்டும் கசாயம்!

image

✱தேவை: கற்பூரவல்லி, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், மிளகு சீரகம், துளசி, இஞ்சி, மஞ்சள் தூள் ✱செய்முறை: மேலே குறிப்பிட்ட அனைத்தையும் (மஞ்சளை தவிர்த்து) நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு, மஞ்சள் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். இதனை இரவில் குடித்து வர நெஞ்சு சளி நீங்கும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அனைவருக்கும் இதை பகிருங்கள்.

error: Content is protected !!