News January 1, 2025
WHATSAPPஇல் அனைவருக்கும் பேமண்ட் வசதி

இந்தியாவில் கோடிக்கணக்கானோர் WHATSAPP பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் அதில் அறிமுகமான பேமண்ட் வசதியை 10 கோடி பேர் மட்டுமே பயன்படுத்த தேசிய பேமண்ட் கார்ப்பரேசன் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் 2025 முதல் அனைவருக்கும் அந்த வசதியை வழங்க WHATSAPPக்கு தேசிய பேமண்ட் கார்ப்பரேசன் அனுமதி அளித்துள்ளது. இதனால் WHATSAPP வைத்திருக்கும் அனைவரும் இனி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
Similar News
News December 10, 2025
ஷூட்டிங்கே போகல.. அதுக்குள்ள ₹80 கோடி லாபம்!

‘ஆவேஷம்’ ஜித்து மாதவன் இயக்கத்தில் ‘சூர்யா 47’ ஷூட்டிங்கே இன்னும் தொடங்காத நிலையில், தயாரிப்பாளர் சூர்யாவுக்கு கிட்டத்தட்ட ₹80 கோடி வரை லாபம் கிடைத்து விட்டதாம். படத்தின் வெளிநாட்டு உரிமம், ஆடியோ, டிஜிட்டல் ரைட்ஸ் ஆகியவை விற்கப்பட்டு, இந்த ஜாக்பாட் சூர்யாவுக்கு அடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், சூர்யா – ஜித்து மாதவன் காம்போ மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளதையும் இது காட்டுகிறது.
News December 10, 2025
அதிமுக ஆட்சியில் பங்கு கிடையாது: தம்பிதுரை

2026 தேர்தலில் வெற்றிபெற்று EPS ஆட்சியமைப்பார்; அதிமுக ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது என்று அதிமுக MP தம்பிதுரை தெரிவித்துள்ளார். ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என விஜய் அறிவித்தபின் தமிழக அரசியல் களமே மாறியிருக்கிறது. குறிப்பாக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் ஆட்சியில் பங்கு என்று தொடர்ந்து பேசி வரும் நிலையில், தம்பிதுரை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
வரும் 31-ம் தேதிக்குள் இதெல்லாம் செஞ்சிடுங்க!

இந்த விஷயங்களை டிசம்பர் 31-ம் தேதிக்குள் தவறாமல் முடித்து விடுங்கள். ✱பான் ஆதார் இணைப்பு ✱2024–25 நிதியாண்டுக்கான தாமதமான அல்லது திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் ✱மலிவு விலையில் வீடு கட்டி கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கு விண்ணப்பித்து விடுங்கள் ✱இவற்றுடன் 2025–26 நிதியாண்டுக்கான 3-ம் தவணைக்கான Advance Tax செலுத்துவதற்கான கடைசி தேதி டிசம்பர் 15 ஆகும்.


