News May 22, 2024

தரமற்ற நிலக்கரிக்கு 3 மடங்கு விலை கொடுப்பதா?

image

அதானியின் பகல் கொள்ளையில் அதிமுக – பாஜக பங்காளிகள் என்று சிபிஎம் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் அதானியிடம் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றார். தமிழகத்திற்கு நிலக்கரி கொள்முதல் செய்ததில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக நாளிதழில் இன்று செய்தி வெளியாகி இருந்தது.

Similar News

News August 30, 2025

டிரம்ப்பால் டாய்லெட்டுக்கு போன USA பிம்பம்: சுல்லிவன்

image

அமெரிக்காவின் பிம்பம் டாய்லெட்டில் கிடப்பதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் விமர்சித்துள்ளார். அதிக வரிவிதிப்பின் காரணமாக, இந்தியா சீனாவிற்கு ஆதரவாக திரும்புவதாகவும், இப்போது பலநாடுகள் USA-ஐ நம்பகமான கூட்டாளியாக கருதாமல், உறவை சீர்குலைக்கும் நாடாக பார்ப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இதன் தாக்கம் நீண்டகாலம் நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 30, 2025

ஹார்ட் டாக்டர், ஹார்ட் அட்டாக்கில் மரணம்

image

சென்னையில் இளம் இதய அறுவை சிகிச்சை நிபுணர், மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவீதா மெடிக்கல் கல்லூரியில் ஆலோசகராக பணியாற்றிய கிராட்லின் ராய்க்கு(39), ஆக.27-ம் தேதி பணியிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சக டாக்டர்கள் போராடியும், அவரை காப்பாற்ற முடியவில்லை. நீண்டநேர பணி, தூக்கமின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் பல டாக்டர்கள் உயிரிழப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். RIP

News August 30, 2025

டிரம்ப் செய்தது மிகப்பெரிய தவறு: UK மீடியா விமர்சனம்

image

சீனாவைக் காட்டிலும் இந்தியா மீது அதிக வரிவிதித்து டிரம்ப் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாக UK ஊடகமான The Economist விமர்சித்துள்ளது. பாகிஸ்தானுடன் நெருங்கி பழகுவதன் மூலம், 25 ஆண்டுகால ராஜதந்திர உறவை டிரம்ப் பாழாக்கி விட்டதாகவும், வளர்ந்து வரும் வல்லரசு நாடான இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் கூறியுள்ளது. மேலும், BRICS மற்றும் PM மோடியின் சீன பயணத்தையும் வரவேற்றுள்ளது.

error: Content is protected !!