News October 14, 2025
PAN Card-ல் இதை கவனியுங்க… இல்லனா ₹10 ஆயிரம் அபராதம்!

செயல்பாட்டில் இல்லாத பான் கார்டை உபயோகப்படுத்தினாலோ, ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டாலோ, ₹10,000 அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பான் கார்டு ஆக்டிவாக இருக்கிறதா என்பதை அறிய ◆e-Filing தளத்தில், Quick Links-ஐ கிளிக் பண்ணுங்க ◆Verify Your PAN-ஐ கிளிக் செய்து, பான் எண் & தனிநபர் தகவலை கொடுத்து, சரிபார்க்கவும். மேலும், வரும் டிச. 31-க்குள் ஆதாருடன் பான் கார்டை இணையுங்கள்.
Similar News
News October 14, 2025
பிஹாரில் காங்கிரஸ் சுருங்கியது எப்படி?

பிஹாரை நீண்டகாலம் ஆண்ட காங்கிரஸ் கட்சி, ஆட்சியை இழந்து 35 வருடங்கள் ஆகின்றன. சோசலிஸ்ட் RM லோஹியா தலைமையிலான ஓபிசி எழுச்சியில், 67-ல் முதல்முறையாக காங்., ஆட்சியை இழந்தது. ஓபிசி, முஸ்லிம், தலித் என காங்., வாக்குவங்கியை வசப்படுத்திய லாலு காங்கிரஸை வீழ்த்தி 90-களில் அரியணை ஏறினார். அதன்பின், கோஷ்டி பூசல், டெல்லி தலையீடு போன்றவை காங்.,கை RJD, JD(U), BJP கட்சிகளுக்கு அடுத்த இடத்துக்கு தள்ளியுள்ளன.
News October 14, 2025
டாஸ்மாக் வழக்கு: ED-க்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. சிபிஐ கூட சோதனை செய்யும் முன்பு சம்பந்தப்பட்ட அரசிடம் தகவல் சொல்கிறது என குறிப்பிட்ட SC, ஒரு வழக்கில் உரிய விசாரணை நடக்கவில்லை என சந்தேகம் எழுந்தால், அதில் உடனடியாக ED தலையிடுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 3 நாள் சோதனையில் TASMAC அதிகாரிகள் அடைத்து வைக்கப்பட்டனரா எனவும் அமலாக்கத்துறையிடம் SC கேட்டுள்ளது.
News October 14, 2025
2025-ல் வசூல் வேட்டையாடிய படங்கள்!

2025 முடிவுக்கு வர இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளது. இன்னும் பல பெரிய படங்கள் ரீலிசுக்கு காத்திருந்தாலும், இந்திய பாக்ஸ் ஆபிசில் பல படங்கள் வசூல் வேட்டையாடியுள்ளன. கலவையான விமர்சனம் இருந்தாலும், ரசிகர்களின் வரவேற்பில் வசூலை வாரிக் குவித்த படங்கள்தான் இந்த ஆண்டு அதிகம். அப்படி இந்த ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்டை மேலே உள்ள படத்தை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும்.