News October 17, 2025
ATM யூஸ் செய்வதற்கு முன் இதை கவனிங்க!

*ATM மையத்தில் சந்தேகத்திற்குரிய பொருள்கள் இருப்பின், உடனடியாக வங்கி (அ) போலீஸை அணுகவும்.
*ATM செயல்பாட்டுக்கான SMS, Gmail-ஐ கண்காணியுங்கள்.
*ATM கார்டு தொலைந்தால் (அ) திருடப்பட்டால் உடனடியாக வாடிக்கையாளர் சேவையை அணுகி ‘Block’ செய்யுங்கள்.
*6 மாதத்திற்கு ஒருமுறை PIN-ஐ மாற்றுங்கள். *1234, பிறந்த தேதி போன்ற எளிதான PIN-களை தவிருங்கள். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 18, 2025
9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 23-ம் தேதி மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
News October 18, 2025
மீனவர்கள் கைது: இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம்

தமிழகம், புதுவை மீனவர்கள் கைதை கண்டித்து, வரும் 27-ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர், இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த ஆண்டு மட்டுமே 180 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 30 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
News October 18, 2025
கவர்னருக்கு எதிரான மனு: கோர்ட் சொன்னது என்ன?

<<18013359>>கவர்னருக்கு<<>> எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே கவர்னரின் அதிகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு குறித்து ஜனாதிபதி எழுப்பினார். அந்த வழக்கில் வரும் 21-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும், அதையடுத்து தமிழக அரசின் மனுவை விசாரிக்கலாம் என்றும் கூறி விசாரணையை CJI கவாய் ஒத்திவைத்தார்.