News April 18, 2025
வியக்க வைக்கும் பவன் கல்யாணின் மனிதநேயம்

நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் செய்த ஒரு காரியம் பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சமீபத்தில்
பழங்குடி கிராமமான பெடபாடுவுக்கு சென்றிருந்த அவர் வயதான பெண்கள் உள்பட பலர் காலில் செருப்பின்றி இருந்ததை கண்டுள்ளார். உடனடியாக அந்த கிராமத்தில் இருக்கும் 350 பேருக்கு செருப்பு வாங்கி கொடுக்க முடிவு செய்து, அதை நிறைவேற்றியும் உள்ளார். யார் சாமி இவர்?
Similar News
News October 16, 2025
கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலை., அமைப்பதற்கான மசோதாவை கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார். இந்த மசோதாவில் பல்கலைக்கு வேந்தராக முதல்வரே இருப்பார் எனும் அம்சம் உள்ளது. இதனை கவர்னர் திருத்த சொல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சட்ட முன்வடிவை திருத்தும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என CM ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
News October 16, 2025
FLASH: லெஜெண்ட் காலமானார்

ஜிம்னாஸ்டிக் உலகின் ஜாம்பவனாக கருதப்படும் அலெக்சாண்டர் டிட்யாடின் (68) மரணமடைந்துள்ளார். 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில், Perfect 10 எடுத்து, இச்சாதனையை செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். (ஜிம்னாஸ்டிக்கில் ஒரு போட்டிக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்) அந்த ஒலிம்பிக் போட்டிகளில் அவர் மொத்தம் 8 பதக்கங்களை வென்று குவித்தார். அவரின் திடீர் மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News October 16, 2025
₹5 லட்சம் போட்டால் ₹10 லட்சமாகும் அசத்தல் திட்டம்

போஸ்ட் ஆபீஸின் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை அப்படியே இரட்டிப்பாக உயரும். இந்த திட்டத்திற்கு தற்போது 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதன்படி, ₹5 லட்சத்தை முதலீடு செய்தால் 9.7 ஆண்டுகள் கழித்து, ₹10 லட்சமாக திருப்பி எடுக்க முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் ₹1,000-லிருந்தே முதலீடு செய்யலாம். இத்திட்டத்தை தொடங்க போஸ்ட் ஆபீஸை அணுகுங்கள். SHARE.