News March 25, 2025
ஹூசைனி மறைவிற்கு பவன் கல்யாண் இரங்கல்!

பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் பதிவில், அவரிடம் தான் கராத்தே பயிற்சி பெற்ற நினைவுகளை பவன் கல்யாண் பகிர்ந்து கொண்டுள்ளார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நள்ளிரவு 1.45 மணியளவில் ஹுசைனி காலமானார். அவருக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
உலகின் உயரமான கட்டடங்கள் PHOTOS

உலகின் மிக உயரமான கட்டடங்கள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கலை வடிவமைப்புக்கு எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன. வானுயர்ந்து நிற்கும் இந்த கட்டடங்கள், நகரங்களின் அடையாளமாகவும் உள்ளன. அப்படி உலகப் புகழ்பெற்ற டாப்-10 உயரமான கட்டங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 19, 2025
MGR முகமூடியை விஜய் போடுகிறார்: ஜெயக்குமார்

விஜய்க்கு என்று ஒரு தனித்தன்மை கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். MGR முகமூடி போட்டுக்கொண்டு வந்தால்தான் மக்களை சந்திக்க முடியும் என்ற நிலையில் விஜய்க்கு உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், MGR, ஜெயலலிதா, அண்ணா என எந்த முகமூடி போட்டு வந்தாலும், இரட்டை இலைக்கு வாக்கு செலுத்திய கைகள் வேறு எந்த கட்சிக்கு வோட்டு போடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 19, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 19, மார்கழி 4 ▶கிழமை: வெள்ளி
▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: அமாவாசை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.


