News October 8, 2025
பட்டா, சிட்டா ஆவணம்.. தமிழக அரசு புதிய மாற்றம்

சொத்துகளை வாங்குவது, விற்பதில் உள்ள சிக்கல்களை குறைக்க ஆளில்லா பதிவு (Presenceless Registration) முறையை அறிமுகப்படுத்த TN அரசு தயாராகி வருகிறது. அதன்படி, சொத்துகளை விற்பவரோ, வாங்குபவரோ பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவு நடைமுறைகளை செய்ய முடியும். சார்பதிவாளர் ஆன்லைனிலேயே விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார். இந்தாண்டு இறுதிக்குள் இது நடைமுறைக்கு வருமாம். SHARE IT.
Similar News
News October 8, 2025
கலிஃபோர்னியாவில் தீபாவளிக்கு அரசு விடுமுறை

USA-வின் கலிஃபோர்னியா மாகாணம், தீபாவளியை அதிகாரப்பூர்வ அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இதன்மூலம், அன்றைய நாளில் விருப்பத்தின் பேரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறை எடுக்கலாம். அரசு ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். பென்சில்வேனியா, கனெக்டிகட் ஆகிய மாகாணங்களை தொடர்ந்து தீபாவளியை அரசு விடுமுறை நாளாக அறிவித்த 3-வது USA மாகாணமாக கலிஃபோர்னியா மாறியுள்ளது.
News October 8, 2025
படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்

மகளிர் ODI WC தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. ஆஸி., நிர்ணயித்த 222 ரன் இலக்கை துரத்திய பாக்., அணியால் ஆஸியின் பவுலிங்கை சமாளிக்க முடியவில்லை. சிட்ரா ஆமின் மட்டுமே 35 ரன் எடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ 114 ரன்களுக்கு பாக்., சுருண்டது. ஆடிய 3 ஆட்டங்களில் தோற்றதால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் பாக்., உள்ளது.
News October 8, 2025
மகளிர் உரிமைத்தொகை.. அரசு புதிய அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு SMS அனுப்பப்பட்டுள்ளது. அது விண்ணப்பத்தின் ஒப்புதலுக்கான மெசேஜ் மட்டுமே, இதனால் உங்களுக்கு ₹1,000 கிடைக்கும் என்று பொருள் இல்லை என அரசு விளக்கம் அளித்துள்ளது. உங்கள் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். வரும் டிசம்பருக்குள் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ₹1,000 வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.