News October 7, 2025

நோயாளிகள் இனி ‘மருத்துவ பயனாளிகள்’

image

நோயாளிகள் இனி ‘மருத்துவ பயனாளிகள்’ என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஹாஸ்பிடலுக்கு சிகிச்சைக்கு வருபவர்களை இனி நோயாளிகள் என அழைக்கக்கூடாது. இதற்கு ஏற்றார்போல் மருந்துச் சீட்டுகளில் ‘நோயாளியின் பெயர்’ என்ற இடத்தில் மருத்துவ பயனாளிகள் என்று மாற்ற வேண்டும். அரசின் இந்த பெயர் மாற்றம் குறித்து உங்கள் கருத்து என்ன?

Similar News

News October 7, 2025

இனி ரிசர்வேஷன் டிக்கெட் தேதியை மாற்றலாம்

image

பயண திட்டம் மாறினால், முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு, விருப்பப்படும் தேதியில் புதிய டிக்கெட்டை புக் செய்வோம். 2026 ஜனவரி முதல், எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் முன்பதிவு டிக்கெட் தேதியை மாற்றலாம். மாற்றும் தேதியில் சீட் இல்லையென்றால், டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாது. ஸ்லீப்பரில் புக் செய்துவிட்டு, மாற்று தேதியில் AC கோச் கிடைத்தால், அதற்கான கூடுதல் தொகையை செலுத்த வேண்டும்.

News October 7, 2025

BREAKING: நயன்தாரா வீட்டில் பரபரப்பு

image

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நயன்தாரா வீட்டுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மோப்பநாய் உதவியுடன் அங்கு தீவிர சோதனை நடத்தப்படுகிறது. சமீபத்தில், கவர்னர் ரவி, CM ஸ்டாலின், விஜய், த்ரிஷா, ஆகியோரது வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், சோதனையின் முடிவில் புரளி என்பது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

News October 7, 2025

பிக்பாஸ் வீட்டில் சண்டை வெடித்தது

image

பிக்பாஸ் தொடங்கிவிட்டது, இனி சண்டைக்கு பஞ்சம் இருக்காது. வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. முதல் நாளில் கெமி உடன் சண்டையிட்ட அவர், தற்போது ரம்யா ஜோவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். அனைத்து விஷயங்களிலும் திவாகர் மூக்கை நுழைப்பதாக ரம்யா கூற, ‘ஏய் செல்றத கேளுமா’ என அவர் சத்தம்போடுகிறார். ‘கத்துற வேலையெல்லாம் வச்சிக்கக் கூடாது’ என ரம்யாவும் பதிலடி கொடுத்துள்ளார்.

error: Content is protected !!