News March 28, 2025
சாலைகளில் நமாஸ் செய்தால் பாஸ்போர்ட் ரத்து

இஸ்லாமியர்கள் ரம்ஜானை கொண்டாட உள்ள நிலையில் அதிரடி உத்தரவை உ.பி. அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி சாலைகளில் நமாஸ் செய்வதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. மீறுவோர் மீது கிரிமினல் வழக்கு பதிந்து, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது. மதக்குருமார்கள் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 10, 2026
அண்ணாமலை பற்றி பேசிய SP வேலுமணி

அண்ணாமலை எது கேட்டாலும் பாஜக கொடுக்கும் என SP வேலுமணி பேசியுள்ளார். அவருக்கு சீட் கிடைக்காததில் தங்களுக்கு பங்கு இல்லை என்ற அவர், யார் யாருக்கு சீட் என்பதை பாஜக தான் முடிவு செய்தது என தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும், அண்ணாமலை, கோவை மட்டுமின்றி எங்கு வேண்டுமானாலும் நிற்கக்கூடிய சூழல் இருப்பதாகவும், பிரசாரத்துக்கு அவரை பயன்படுத்தலாம் என பாஜக நினைத்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News April 10, 2026
நெஞ்சு சளி நீங்க இந்த கசாயத்தை குடிங்க!

➤தேவை: கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை, இஞ்சி, மிளகு, சீரகம் ➤செய்முறை: வெந்நீரில் தலா 5 கற்பூரவள்ளி & துளசி இலைகளை சேர்க்கவும். பின்னர், வெற்றிலையின் நரம்பை காம்போ நீக்கிவிட்டு அதனுடன் சேர்க்கவும். மிளகு, இஞ்சி, சீரகத்தை இடித்து சேர்க்கவும். ஒன்றரை கிளாஸ் தண்ணீர் 1 கிளாஸ் அளவிற்கு வரும் வரை நன்கு கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்து வடிகட்டி ஆறவைத்து குடிக்கலாம் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
News April 10, 2026
விஜய்யுடன் காங்கிரஸ்.. ஒரேநாளில் மாறியது

உண்மையான காங்., தவெக பக்கம் உள்ளது என விஜய் நேற்று முன்தினம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதனை தமிழக காங்., மறுத்துள்ளது. குறிப்பாக, விஜய்யுடன் காங்., இல்லை; திமுகவுடன் தான் கட்சி உள்ளது என நேற்று கர்நாடக DCM <<19608310>>சிவகுமார்<<>> வெளிப்படையாக கூறியிருந்தார். விஜய் கூறியதற்கு காங்., தேசியத் தலைவர்களும் மறுப்பு தெரிவித்து, ஒரேநாளில் விஜய்யின் கருத்தை மாற்றி தெளிவுபடுத்தியுள்ளனர்.


