News May 13, 2024
ஆர்வமாக ஜனநாயக கடமையாற்றும் மக்கள்

தெலங்கானா, ஆந்திரா, பீஹார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 11 மணி நிலவரப்படி ஆந்திராவில் 23.10%, பீஹாரில் 22.54%, ஜம்மு & காஷ்மீரில் 14.94%, ஜார்கண்டில் 27.40%, ம.பி.யில் 32.38%, மகாராஷ்டிராவில் 17.51%, ஒடிஷாவில் 23.28%, தெலங்கானாவில் 24.31%. உ.பி.யில் 27.12% மேற்கு வங்கத்தில் 32.78% வாக்குகள் பதிவாகியுள்ளது.
Similar News
News March 18, 2026
கார்கே, சரத் பவாரை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்: PM மோடி

ராஜ்யசபா பதவிக்காலம் முடியலாம், ஆனால் அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை என ஓய்வுபெறும் 37 ராஜ்யசபா MP-களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் PM மோடி பேசினார். தேவகவுடா, மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் ஆகியோர் தங்கள் வாழ்நாளின் பாதி காலத்தை பார்லிமெண்ட் பணிகளிலேயே செலவிட்ட தலைவர்கள் என்றார். புதிதாக தேர்வாகியுள்ள MP-க்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News March 18, 2026
தங்கம் விலை மேலும் குறைந்தது

போர் பதற்றத்திற்கு மத்தியிலும் தங்கம் விலையானது தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 11-ம் தேதி சவரன் ₹1,20,960-க்கு விற்பனையான தங்கம் 7 நாள்களில் ₹4,074 குறைந்து ₹1,16,560 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) $9 குறைந்து $4,990 ஆக உள்ளது. இதே நிலை நீடித்தால் நாளையும் நம்மூர் சந்தையில் தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 18, 2026
IPL 360: CSK அணியில் கீப்பராகும் சஞ்சு?

*சஞ்சு சாம்சனை CSK அணியின் விக்கெட் கீப்பராக தோனி மாற்றலாம் என கும்ப்ளே ஆலோசனை தெரிவித்துள்ளார் *இந்த வருடமும் MI-ல் ரோஹித் சர்மா, Impact பிளேயராக களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது *காயம் காரணமாக KKR வீரர் பதிரனா சில போட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது *கடந்த ஆண்டு 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய நடராஜன், இந்த ஆண்டு DC அணியின் முக்கிய பவுலராக மாறலாம் எனக் கூறப்படுகிறது.


