News December 20, 2024
பாஷா விவகாரம்: சீமானுக்கு அண்ணாமலை சுளீர் கேள்வி

கோவை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான பாஷா அண்மையில் காலமானார். அப்போது சீமான் அவரை ‘அப்பா’ எனக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, கோவை குண்டுவெடிப்பில் இறந்துபோன 50 பேருக்கு அப்பா இல்லையா எனக் கேள்வியெழுப்பினார். மேலும், பாஷாவை அப்பா என சொல்லி, வெட்கமே இல்லாமல் சீமான் ஓட்டுப் பிச்சை வாங்குவதாகவும் அண்ணாமலை விமர்சித்தார்.
Similar News
News March 8, 2026
₹1 செலவில்லை.. இலவச மருத்துவ ஆலோசனை!

பல இடங்களில் மருந்துச் செலவை விட, டாக்டரின் Consultation Fees மிக அதிகமாக உள்ளது. இது ஏழை எளிய மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இதனை தவிர்க்க, மத்திய அரசு இ-சஞ்சீவனி என்ற திட்டத்தை வழங்குகிறது. இணையதளம் மூலம் தொலைபேசி / வீடியோ கால் மூலம் நோய்கள் & சிகிச்சைகள் பற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறலாம். இதில் வழங்கப்படும் இ-பிரிஸ்கிரிப்ஷனை வைத்து மருந்துகளும் வாங்கலாம். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 8, 2026
காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது!

வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாள்களாக கிலோ ₹10-க்கு விற்பனையான தக்காளி அதிலும் பாதியாக குறைந்து இன்று 1 கிலோ ₹5-க்கு விற்பனையாகிறது. அதேபோல், 1 கிலோ வெங்காயம் ₹18, கேரட் ₹20, கத்திரிக்காய் ₹15, முருங்கைக்காய் ₹50 என காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்த விலை சரிவு விவசாயிகளுக்கு வேதனையை கொடுத்துள்ளது.
News March 8, 2026
எழுதாத பேனாவுக்கு சிலை எதற்கு? EPS

எழுதாத பேனாவுக்கு கடலில் ₹82 கோடியில் சிலை வைக்க முயற்சிக்கின்றனர். எழுதாத பேனாவுக்கு சிலை எதற்கு என EPS கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல, கார் பந்தயத்துக்கு ₹100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக கூறிய அவர், மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக இந்த அரசு செலவிட்டுள்ளது எனவும் விமர்சித்துள்ளார். மேலும், திமுக அரசை அகற்றுவதுதான் மக்களின் கனவு எனவும் பேசியுள்ளார்.


