News March 18, 2024

கடலூரில் கட்சி கொடி அகற்றினர்

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கடலூரில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி கம்பம் இருந்து வந்தன.இதனை அவர்களாகவே எடுத்து கொள்ளும்படி கலெக்டர் அருண் தம்புராஜ் வலியுறுத்தினார். இதனை மீறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் அதனை அகற்றி விடும் என்று கூறினார் இந்த நிலையில் கடலூர் பாரதி சாலையில் உள்ள கொடிக்கம்பங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

Similar News

News September 10, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2025

கடலூர்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கடலூர் மாவட்டத்தில் நாளை செப்டம்பர் 10ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் வன்னியர் திருமண மண்டபம் கடலூர், புஷ்பாவதி திருமண மண்டபம் காராமணிக்குப்பம், புயல் பாதுகாப்பு மையம் சின்னூர் புதுப்பேட்டை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கானூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

News September 9, 2025

ஆலப்பாக்கம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி” திட்டத்தில் வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (09.09.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!