News September 8, 2025
துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் கட்சிகள்

ஜனாதிபதி தேர்தல்களில் பலமுறை பாஜகவுக்கு கைகொடுத்த பிஜு ஜனதா தளம் கட்சி, இந்த முறை துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளது. எந்த தரப்புக்கும் ஆதரவில்லை எனத் தெரிவித்துள்ள அக்கட்சிக்கு ராஜ்ய சபாவில் 7 எம்பிக்கள் உள்ளனர். இந்த தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என தெலங்கானாவின் பிஆர்எஸ் கட்சியும் அறிவித்துள்ளது. இக்கட்சிக்கு ராஜ்ய சபாவில் 4 எம்பிக்கள் உள்ளனர்.
Similar News
News September 8, 2025
அதிமுக ஆம்புலன்ஸில் போகாது: உதயநிதிக்கு EPS பதில்

ஆம்புலன்ஸ்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் EPS-க்கு, தனது கட்சியையே ஆம்புலன்ஸில் அனுப்பும் நிலையை விரைவில் மக்கள் கொடுப்பார்கள் என <<17646978>>உதயநிதி <<>>விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த EPS, அதிமுக எந்த காலத்திலும் ஆம்புலன்ஸில் செல்லாது என்றும் வலிமையாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு அடியோடு கெட்டுவிட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News September 8, 2025
Parenting: குழந்தைகளிடம் இப்படி சொல்லுங்க; கேட்டுப்பாங்க

பெற்றோர்களே, குழந்தைகள் கேட்கும் அனைத்திற்கும் நீங்கள் ’NO’ என சொன்னால் அது அவர்களை விரக்திக்கு உள்ளாக்கும். இதனால் ’NO’ என சொல்வதற்கு பதிலாக இந்த முறைகளை நீங்கள் கையாளலாம். ➤அவர்கள் கேட்பதை கொடுக்கமுடியவில்லை என்றால், அதற்கு பதிலாக வேறு விஷயத்தை கொடுங்கள் ➤அவர்களது கவனத்தை திசைத்திருப்ப முயற்சியுங்கள் ➤’NO’ சொல்வதற்கான காரணத்தை விளக்குங்கள் ➤பொய்களை கூற வேண்டாம். SHARE.
News September 8, 2025
BREAKING: முடிவை மாற்றினார் செங்கோட்டையன்!

ஹரித்வார் போகவே டெல்லி செல்வதாகவும், பாஜக தலைவர்களை சந்தித்து பேசப் போவதில்லை என்றும் தெரிவித்த செங்கோட்டையன் தனது முடிவை தடாலடியாக மாற்றியுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், அமித்ஷாவை சந்தித்துள்ளார். அதில், அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக அவரிடம் செங்கோட்டையன் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் மறுபடியும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ?