News March 4, 2025
அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்பு!

நாளை நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்க உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக அரசின் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக, தமாக, நாதக ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News March 4, 2025
அப்பாடா.. ஹெட் அவுட்… INDIA ரசிகர்கள் ஹேப்பி!

இந்திய கிரிக்கெட் அணிக்கு எப்போதும் தண்ணி காட்டும் வீரரான ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் அவுட் ஆகியுள்ளார். 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தபோது வருண் சக்ரவர்த்தி பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 2023 உலகக்கோப்பை ஃபைனலில் ஹெட் சதமடித்து ஆஸி. அணியை வெற்றிபெற வைத்தார். இன்றைய போட்டியில் அவர் அவுட் ஆகி இருப்பது இந்திய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி.
News March 4, 2025
வெயிலிலும் ஜில்லுனு இருக்க நச்சுனு 5 டிப்ஸ்!

இது மார்ச் மாதமா அல்ல மே மாதமா என்றே புரியாத அளவிற்கு இப்போதே வெயில் வாட்டுகிறது. இந்த வெயிலை சமாளிக்க: தண்ணீர் மட்டுமே அருந்தாமல், இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் *இறுக்கமான உடைகளை தவிர்த்து, தளர்வான உடைகள், அணியுங்கள் *தொடர்ந்து வெயிலில் நிற்காமல், நிழலான இடத்தில் நில்லுங்கள் *சம்மரில் ஹெவி உடற்பயிற்சி வேண்டாம் *உச்சிவெயிலில் சூடான மசாலா உணவுகளை தவிருங்கள்.
News March 4, 2025
புதிய சாதனைக்கு ரெடியாகும் விராட் கோலி!

ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, ஏராளமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். தற்போது மேலும் ஒரு சாதனை படைக்க அவர் காத்திருக்கிறார். இன்றைய போட்டியில் 40 ரன்கள் எடுத்தால் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற சாதனை கோலி வசமாகும். இதுவரை 16 போட்டிகளில் 662 ரன்கள் குவித்துள்ளார் விராட். பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தவான் 10 போட்டிகளில் 701 ரன்கள் குவித்திருக்கிறார்.