News March 25, 2025
ஆளுநரை புகழ்ந்த பார்த்திபன்; விமர்சித்த வன்னியரசு!

நடிகர் பார்த்திபன் ஆளுநர் ஆர்.என்.ரவியை புகழ்ந்து பேசியது தவறு என விசிகவின் வன்னியரசு விமர்சித்துள்ளார். ஆளுநரின் தமிழர் விரோத மற்றும் தமிழ் பண்பாட்டு விரோதப் போக்கு பெருகிக் கொண்டே போகிறது. தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் அப்படிப்பட்டவர்களை தங்களை போன்ற ஆளுமைகள் புகழ்வது தமிழகத்திற்கு இழைக்கும் துரோகமில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News March 28, 2025
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் 5 பேர் ஊடுருவியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 5 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News March 28, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது ▶எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள் ▶ஒன்றே குலம், ஒருவனே தேவன் ▶ விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிக கேடு ▶உலகின் பிளவு குடும்பத்தில் ஆரம்பிக்கிறது.
News March 28, 2025
காம சிந்தனைகளால் ஏற்படும் வஞ்சித தோஷம் நீங்க…

ஜாதகத்தில் சந்திரன் நிலை கெட்டிருந்தாலும், காம சிந்தனைகளால் மதி திசைமாறி நடப்பதாலும் வஞ்சித தோஷம் ஏற்படுகிறது. அதை போக்க வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, சிவப்பு நிற வஸ்திரம் அனைத்து 48 தீபங்களை ஏற்றி அம்மனை வழிபட்டு 11 ஏழைப் பெண்களுக்கு உணவிட்டு, சேலை தானம் அளித்தால் வஞ்சித தோஷம் விலகும் என ஐதீகம்.