News August 8, 2024
விளையாட்டில் தோல்வியும் ஒரு பகுதி: மீரா

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பளுதூக்குதலில் நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்த இந்திய வீராங்கனை மீராபாய் சானு, அடுத்த முறை நிச்சயம் நாட்டிற்காக பதக்கம் வெல்வேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். தன்னால் முடிந்தளவு முயற்சி செய்ததாகவும், ஆனால் தோல்வியும், வெற்றியும் விளையாட்டின் ஒரு பகுதி எனவும் பக்குவமாக பேசியுள்ளார். மீரா, 199 கிலோ எடையை தூக்கி 4ஆம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 6, 2025
BREAKING: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

OPS அணியில் உள்ள அதிருப்தியாளர்களை அதிமுகவும், திமுகவும் மாறி மாறி தங்கள் வசம் இழுத்து வருகின்றன. சென்னையில், OPS அணி, <<18179880>>AMMK நிர்வாகிகள்<<>> பலரும் மீண்டும் அதிமுகவுக்கு படையெடுத்துள்ளனர். அந்த வகையில், ராணிப்பேட்டை அதிமுகவில் முக்கிய நபராக வலம் வந்த ரமேஷ் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். OPS அணியிலிருந்த <<18194000>>மனோஜ் பாண்டியன்<<>> திமுகவுக்கு தாவியது குறிப்பிடத்தக்கது. உங்கள் கருத்து?
News November 6, 2025
உங்கள் குழந்தை நன்றாக படிக்க இதை பண்ணுங்க!

10,12-ம் பொதுத்தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், குழந்தைகள் நன்றாக படிக்க பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை இங்கு போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். படி படி என்று சொன்னால் மட்டும் போதாது, அவர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். போட்டோக்களை மேலே SWIPE செய்து பார்க்கவும்.
News November 6, 2025
CM ஸ்டாலின் அறிக்கை விட்டு ஒளிந்துகொள்வார்: விஜய்

தவெக பொதுக்குழுவில் CM ஸ்டாலினை விஜய் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். மக்களுக்கு திமுக அரசு மீதான நம்பிக்கை முழுவதுமாக மண்ணில் புதைந்துவிட்டதாகவும், 2026 தேர்தலில் திமுக தலைமைக்கு அதை இன்னும் ஆழமாக புரிய வைப்பார்கள் என்றும் விஜய் கூறினார். அப்போது, பழக்க தோஷத்தில் மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்று அறிக்கை வெளியிட்டு, அறிவாலயத்திற்குள் ஸ்டாலின் ஓடி ஒளிந்துகொள்வார் என அவர் விமர்சித்துள்ளார்.


