News March 17, 2024
நாடாளுமன்றத் தேர்தல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஏப்ரல்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் 21 பறக்கும் படையினர், 21 நிலையான கண்காணிப்பு குழுக்கள்,14 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் தேர்தல் குறித்த புகார்களை தொலைபேசி மூலம் தெரிவிக்க 18004257088 ,27427412 &27427414 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Similar News
News April 4, 2025
1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த லிங்கை <
News April 4, 2025
ஆம்னி பேருந்து மீது மோதி: காவலர் பலி

ஆலந்தூர் அருகே உள்ள ஆசர்கானா பகுதியில், போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் (SI) சிவகுமார் (53) நேற்று (ஏப்ரல் 3) பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னாள் சென்ற ஆம்னி பேருந்து ஒன்று அவரது பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 4, 2025
ராஜேந்திரசோழன் மெய்கீர்த்தி கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஈசூர் பாலாற்றில், ராஜேந்திர சோழன் மெய்கீர்த்தி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 12 வரிகள் கொண்ட இந்த கல்வெட்டு, ஆற்றங்கரை பகுதியில் உள்ள பழங்கால கோவிலில் இருந்திருக்கலாம். முழுமையான கல்வெட்டாக இல்லாததால், கோவிலைப் பற்றியோ, தற்போது இந்த கோவில் உள்ளதா என்பதைப் பற்றியோ அறிய முடியவில்லை. இந்த கல்வெட்டை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக வரலாற்றுத் துறை விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.