News May 19, 2024

OTP தர மறுக்கும் பெற்றோர்கள்

image

தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளி மாணவர்களின் விவரங்களும் EMIS தளத்தின் மூலம் ஆன்லைனில் பராமரிக்கப்படுகிறது. இந்தாண்டு முதல் இத்தளம் மூலம் மாணவர்களின் மதிப்பெண், பள்ளி சார்ந்த தகவல்கள் பெற்றோருக்கு SMS மூலம் தெரியப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பெற்றோரின் செல்போன் எண்களை சரி பார்க்க OTP அனுப்பப்படுகிறது. ஆனால், பெற்றோரோ, ஆசிரியர்களிடம் OTP சொல்ல அச்சமடைகின்றனர். இதனால், இப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Similar News

News March 7, 2026

இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுங்கள்!

image

இரவு உணவை சீக்கிரமாக (மாலை 6-8 மணிக்கு) சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் சிலருக்கு லேட் நைட்டில் பசி எடுக்கலாம். ஆனால், அப்போது சாப்பிடுவதை தவிர்க்கவும். இரவு உணவில் அதிக புரத உணவுகளை எடுத்துக் கொண்டால், நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும். இது லேட் நைட் பசியை கட்டுப்படுத்தி, ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும்.

News March 7, 2026

ராசி பலன்கள் (07.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News March 7, 2026

தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

image

ஈரான் – USA, இஸ்ரேல் இடையேயான போர் தொடங்கிய அடுத்த நாளே தங்கம் விலை சவரனுக்கு ₹7,000 அதிகரித்தது. அதன்பிறகு, தலைகீழ் மாற்றமாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் ₹6,520 குறைந்திருப்பது நடுத்தர மக்கள், நகைப் பிரியர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹15,000-க்கு கீழே சென்றுள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் கணிசமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!