News April 28, 2025
பெற்றோர் விவாகரத்து: மனம் திறந்த நடிகை ஸ்ருதிஹாசன்!

பெற்றோர் விவாகரத்தால் வாழ்க்கை தலைகீழாக மாறியதாக நடிகை ஸ்ருதிஹாசன் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவரது தந்தை கமல்ஹாசன், தாயார் சரிகா இருவரும் பிரிந்தபோது ஸ்ருதிஹாசன் சரிகாவுடன் மும்பைக்கு சென்றார். ஆனால், அங்கு பெரும் சிரமத்தை அனுபவித்ததாக கூறிய அவர், BMWவில் இருந்த வாழ்க்கை லோக்கல் டிரைனுக்கு மாறியது எனத் தனது கசப்பான அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
Similar News
News December 1, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

கிருஷ்ணகிரியில் அதிமுகவில் இருந்து விலகிய 2,000 பேர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கடந்த மாதம் 13-ம் தேதி திமுகவில் இணைந்த அதிமுகவின் Ex ஓசூர் மாநகர கிழக்கு மண்டல குழுத் தலைவர் புருசோத்தமரெட்டி தலைமையில் இந்த இணைப்பு நடைபெற்றுள்ளது. மேலும், கே.பி.முனுசாமியின் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை குறிவைத்து திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News December 1, 2025
டிரம்ப் கொள்கை: அடிவாங்கும் இந்திய IT நிறுவனங்கள்

டிரம்பின் கடுமையான விசா கொள்கைகளால், இந்திய IT நிறுவனங்களுக்கான விசா ஒப்புதல்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. ஆய்வு ஒன்றின்படி, 2015 உடன் ஒப்பிடுகையில் H-1B விசா ஒப்புதல்கள் 70% குறைந்துள்ள நிலையில், 2024-ஐ விட 37% குறைந்துள்ளது. 2025-ம் நிதியாண்டில் வெறும் 4,573 விசா ஒப்புதல்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. USA-வில் புதிய H-1B விசாக்களை பெறும் முதல் 5 நிறுவனங்களில் TCS மட்டுமே இந்திய நிறுவனம் ஆகும்.
News December 1, 2025
காங்., மாநில பொதுச் செயலர் கைது

பணமோசடி வழக்கில் காங்., கட்சியின் மாநில பொதுச் செயலர் தளபதி பாஸ்கரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவலிங்கா சிட் ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த அவர், பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னையில் ஹோட்டலில் தலைமறைவாக இருந்த அவரை, முற்றுகையிட்டு பணம் முதலீடு செய்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாஸ்கரை கைது செய்தனர்.


