News September 5, 2024
பெற்றோர்களே உஷார்: Digital Dementia தெரியுமா?

அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளை Digital Dementia தாக்கும் ஆபத்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அது என்ன Digital Dementia? செல்போன், டிவி என டிஜிட்டல் திரைகளை அதிகம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு தான் அது. நினைவாற்றல் இழப்பே இதன் முதல் அறிகுறி. பிறகு, எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாதவர்களாக மாறுவார்கள் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
Similar News
News August 4, 2025
சாதித்தது இளம் படை: தொடரை சமன் செய்தது இந்தியா

ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாமல் சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்து சென்ற இந்திய இளம் டெஸ்ட் அணிக்கு தொடக்கமே சூப்பராக அமைந்திருக்கிறது. கை நழுவிப் போனதாக எண்ணிய தொடரை, கடைசி டெஸ்ட் கடைசி நாளில் தலைகீழாக மாற்றி இருக்கிறது இந்த இளம் படை. 5-வது டெஸ்டில் த்ரில் வெற்றிபெற்றதன் மூலம் 2 -2 என்ற கணக்கில் ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடர் சமனில் நிறைவடைந்துள்ளது.Well done boys..!
News August 4, 2025
நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்து 3 ஆண்டுகளாக மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், டெல்லி போலீசாரால் பிடிக்கப்பட்ட மீரா மிதுன் அங்குள்ள அரசு காப்பகத்தில் இருப்பதாக போலீஸ் கூறியுள்ளது. அவரை கைது செய்து ஆகஸ்ட் 11-ல் ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News August 4, 2025
எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி: ராமதாஸ்

லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி தனது வீட்டில் ரகசியமாக மறைந்து வைக்கப்பட்டிருந்ததாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தனது நாற்காலிக்கு பக்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கருவியை நேற்று முன்தினம் கண்டுபிடித்ததாகவும் கூறியுள்ளார். யார் வைத்தார்கள்? எதற்கு வைத்தார்கள்? என தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரித்து வருதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.