News March 17, 2024
பெற்ற மகளையே கொன்ற பெற்றோர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதல் விவகாரம் காரணமாக பெற்ற மகளையே கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். 11ஆம் வகுப்பு படிக்கும் மகளை ஏரியில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு காணாமல் போனதாக பெற்றோர் நாடகமாடி இருக்கின்றனர். மாணவி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தாய், தந்தை, உடந்தையாக இருந்த பெரியம்மா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News January 10, 2026
தங்கம் விலை கிடுகிடுவென மாற்றம்

வார இறுதி நாளான இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, 1 அவுன்ஸ்(28g) தங்கம் $56.97 உயர்ந்து $4,509-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் அவுன்ஸ் $4.34 உயர்ந்து $79.91-க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக இந்திய சந்தையிலும் இன்று தங்கம் விலை(நேற்றைய விலை :சவரன் ₹1,02,400) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 10, 2026
விஜயகாந்துக்கு பாரத ரத்னா வழங்குக: தேமுதிக

விஜயகாந்த் இறந்த பிறகு கடலூரில் நடைபெற்ற முதல் மாநாட்டில், தொண்டர்களின் எழுச்சி அதிகமாக இருந்ததாக பிரேமலதா கூறியுள்ளார். மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என தேமுதிக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், பொது இடத்தில் விஜயகாந்திற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News January 10, 2026
‘பராசக்தி’ UNCUT வெர்ஷன் பார்க்கனுமா?

‘பராசக்தி’ படம் இன்று வெளியாக உள்ள நிலையில் முட்டிமோதி சென்சார் சான்றிதழை படக்குழு நேற்று வாங்கிவிட்டது. சென்சாரில் சொல்லப்பட்ட பல காட்சிகள் Cut செய்யப்பட்டும், சில இடங்களில் Mute செய்தும் இன்று பராசக்தியின் ஒளி திரையில் பிரகாசிக்கவுள்ளது. ஆனால் பராசக்தியின் UNCUT வெர்ஷனை இங்கிலாந்தில் வசிக்கும் தமிழர்கள் பார்க்கலாம். இதனை அப்படத்தை அங்கு வெளியிடும் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


