News August 31, 2025
Parenting: குழந்தைக்கு வயிற்றில் புழு தொல்லையா? இதோ தீர்வு

வயிற்றில் புழு தொல்லை இருப்பதால் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லையா? எளிதில் கிடைக்கும் பொருள்களை வைத்து இதனை தீர்க்கலாம் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாய்விடங்கம் 25 g, மிளகு 3-5 g எடுத்து, குப்பைமேனி சாறுடன் கலந்து, வெயிலில் வைக்கவும். சாறு வற்றியவுடன், அதை பொடிசெய்து, அரை டீஸ்பூன் எடுத்து, 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 3 நாள்கள் கொடுக்கவும். SHARE IT.
Similar News
News September 3, 2025
EPSக்கு எதிராக அதிருப்தி குரல்கள்

EPS உடன் மோதல் ஏற்பட்ட நிலையில், பவானி MLA பண்ணாரி, தம்பி சுப்பிரமணி உள்ளிட்டோர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக சென்றனர். கட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அதிருப்தியில் இருந்த முன்னாள் MP சத்தியபாமாவும், செங்கோட்டையனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார். EPS மீது அதிருப்தியில் இருக்கும் வேறு சிலரும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News September 3, 2025
காய்கறிகளை இப்படி சேமித்தால் சீக்கிரம் கெடாது

மழைக்காலத்தில் வாங்கி வைத்த காய்கறிகள் சீக்கிரமாக கெட்டுவிடும் என்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதனால் உணவு பொருள் வீணாவதோடு, நமது பணமும் விரயமாகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் மழைக்காலத்திலும் காய்கறிகள் கெட்டுப்போகாமல் நீண்ட நாள் Fresh-ஆக இருக்கும். Try பண்ணி பாருங்க. SHARE.
News September 3, 2025
அமித்ஷா ஆலோசனையில் பங்கேற்காத அண்ணாமலை

டெல்லியிலுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் நயினார், வானதி உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில், அண்ணாமலை பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில் தமிழக பாஜகவில் நிலவும் உள்கட்சி பிரச்னை, புதிய நிர்வாகிகள் நியமனம், NDA கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனையில் அண்ணாமலை பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.