News September 9, 2025
Parenting: பிள்ளைகள் இப்படி படிச்சா நல்ல Mark வாங்கலாம்

எக்ஸாம் தொடங்கிவிட்டால், உங்கள் பிள்ளைகள் பயப்படுகிறார்களோ இல்லையோ, பெற்றோர்களாகிய உங்களுக்கு கவலை வந்துவிடும். அவர்கள் எளிதில் படித்து நல்ல மதிப்பெண்களை வாங்க சில வழிகள் உண்டு. ➤எப்படி படிக்கவேண்டும் என்பதை திட்டமிடுங்கள் ➤செல்போனை அருகில் வைக்க வேண்டாம் ➤படிப்பதை எழுதி பார்க்க சொல்லுங்கள் ➤கடினமான கேள்விகளுக்கு அதிக நேரம் ஒதுக்கவேண்டும் ➤ தேவையான அளவு ஓய்வு எடுக்கவேண்டும். SHARE.
Similar News
News September 10, 2025
நேபாளில் ராணுவ ஆட்சி

நேபாள் நாட்டில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை கண்டித்து இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் நேபாள் ஜனாதிபதி, PM ராஜினாமா செய்தனர். நாடாளுமன்றம், அமைச்சர்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நேபாள் ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது.
News September 10, 2025
‘96 பிரேம்குமார் இயக்கத்தில் பஹத் பாசில்

ரசிகர்கள் யாரும் எதிர்பாராத கூட்டணியாக இயக்குநர் பிரேம்குமார், பஹத் பாசில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது ஆக்ஷன் த்ரில்லர் படம் எனவும் தனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரேம்குமார் கூறியுள்ளார். ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மேலும், விக்ரமுடனான படத்திற்கு திரைக்கதை எழுத வேண்டியிருப்பதாக பிரேம்குமார் தெரிவித்தார்.
News September 10, 2025
திமுகவுக்கு தோல்வி பயம்: தவெக அருண்ராஜ்

விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி தர மறுப்பது திமுகவின் பயத்தை காட்டுவதாக தவெக கொள்கை பரப்புப் பொ.செ அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மக்களிடையே தவெகவிற்கு பெருகி வரும் செல்வாக்கை பார்த்து திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும், அதனால் விஜய்க்கு நெருக்கடி கொடுக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். திமுக அரசு கொடுக்கும் நெருக்கடி தவெகவுக்கு சாதகமாக முடியும் என்று அருண்ராஜ் கூறினார்.