News August 17, 2024
சூடானில் கோரத்தாண்டவம் ஆடிய துணை ராணுவப் படை

சூடானில் துணை ராணுவப் படை (RSF) நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினார் மாநிலம் ஜல்க்னி கிராமத்தில் இருந்து பெண்களை RSF படையினர் கடத்த முயன்றபோது, கிராம மக்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த துணை ராணுவத்தினர், கண்மூடித்தனமாக மக்களை நோக்கி சுட்டனர். இந்த தாக்குதலால் ஒட்டுமொத்த கிராமமும் ரத்தக்களரியானது.
Similar News
News December 4, 2025
வேலூர்: திருப்பதி சென்றவர்களுக்கு விபத்து!

வேலூர்: மகாராஷ்டிரா மாநிலம் பூனாவை சேர்ந்த பக்தர்கள் கேரளாவில் ஐயப்ப சுவாமி தரிசனம் செய்து விட்டு திருப்பதி செல்கையில், வேலூர் காட்பாடி காவல் நிலையம் எதிரே சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவர் படுகாயமடைந்த நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News December 4, 2025
சமந்தா கணவரின் EX மனைவி எமோஷனல் பதிவு

சமந்தா உடனான திருமணம் நடந்து 3 நாள்களுக்கு பிறகு, ராஜ் நிடிமோருவின் EX மனைவி ஷியாமளி தனது இன்ஸ்டாவில் எமோஷனல் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். கடந்த காலங்களில் பல நாள்கள் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும், அப்போது தனக்கு துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி எனவும் அவர் அதில் கூறியுள்ளார். மேலும், கவன ஈர்ப்பிற்காகவோ, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து டிராமா நடத்தவோ இதை பதிவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
திருப்பரங்குன்றம் வழக்கு: தமிழக அரசுக்கு அதிர்ச்சி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை மதுரை HC அமர்வு தள்ளுபடி செய்தது. தமிழக அரசு உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் HC அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசு கடமையை தவறியதாலேயே CISF வீரர்கள் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.


