News March 18, 2024
பழனியில் இன்று பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 23ஆம் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த நாள் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டமும் நடக்கிறது.
Similar News
News December 5, 2025
BREAKING: திண்டுக்கல்லில் லஞ்சம் பெற்ற VAO கைது!

திண்டுக்கல், அய்யம்பாளையத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் கன்னிவாடி அருகே உள்ள 6.1/2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக, ஆத்தூர் தாலுகா மணலூர் கிராம நிர்வாக அலுவலர் முருகன் என்பவர் ஆத்தூர் தாலுகா அலுவலகம் வளாகத்தில் உள்ள VAO அலுவலகத்தில் வைத்து ரூ.10,000 லஞ்சம் பெறும்போது, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரிக்கின்றனர்.
News December 5, 2025
திண்டுக்கல்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!
News December 5, 2025
திண்டுக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<


