News September 5, 2025
சூர்யா படத்தை சுற்றும் பஞ்சாயத்து?

சூர்யா-R.J.பாலாஜி கூட்டணியின் ‘கருப்பு’ ஷூட்டிங் முடிந்து தீபாவளிக்கு வருவதாக இருந்தது. இதற்கான எடிட்டிங் பணிகளின் போது, சில காட்சிகள் திருப்தியாக இல்லை என்பதால் ரீ-ஷூட் செய்ய 15 நாட்கள் வேண்டும் என கூறியுள்ளாராம் பாலாஜி. ஆனால், சூர்யாவோ தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்க, தயாரிப்பு தரப்போ பட்ஜெட்டில் கறாராக இருக்க, செய்வதறியாமல் பாலாஜி தவிப்பதாக கூறப்படுகிறது. படம் தீபாவளிக்கு வந்துடுமா?
Similar News
News September 7, 2025
Beauty Tips: 7 நாள்களில் முகம் பொலிவாக செம்ம டிப்ஸ்

முகம் எப்போதும் டல்லாக இருக்கிறதா? ஏழே நாள்களில் பொலிவாக இதை செய்து பாருங்கள். ➤ரோஜா இதழ்களை அரைத்து, பச்சை பாலை சேர்த்து முகத்தில் தடவலாம் ➤தினமும் 7-10 நிமிடங்கள் நீராவி பிடிப்பது நல்லது ➤இரவில் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள் ➤தேனுடன் கடுக்காய் பொடியை கலந்து முகத்தில் அப்ளை செய்து வர முகத்தில் இருக்கும் அனைத்து பிரச்னைகளையும் சரியாகும். SHARE.
News September 7, 2025
சந்திர கிரகணமும் அறிவியலும்

சந்திர கிரகணம் என்பது ஒரு அற்புதமான வானியல் நிகழ்வாகும். சந்திரன், சூரியன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. சந்திர கிரகணத்தால் எந்த பேரழிவோ, உடல்நல பாதிப்போ ஏற்படாது என்கின்றனர் விஞ்ஞானிகள். எல்லா நாள்களிலும் ஏற்படுவது போலவே தான், கிரகணம் அன்றும் உடல்நலப் பிரச்னைகளும், தனிப்பட்ட பிரச்னைகளும் ஏற்படுகின்றன என்கின்றனர். மற்றவை எல்லாம் நம்பிக்கை தானாம். SHARE IT
News September 7, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். வெளிநாடு சென்றுள்ள CM ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும் அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நாளை அவர் தமிழகம் திரும்புகிறார். அதன்பின், ஓரிரு நாள்களில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அப்டேட் கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.