News December 15, 2024
MHஇல் பஞ்சாயத்து ஓவர்.. இன்று மினிஸ்டர்கள் பதவியேற்பு

நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒருவழியாக MH மாநில அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. நாக்பூரில் நடக்கும் விழாவில் பாஜகவில் 20 – 21, சிவசேனாவில் 10 – 12, என்சிபியில் -10 பேர் என சுமார் 40 பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், யார் யாருக்கு என்ன இலாகா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. Dy CM ஏக்நாத் ஷிண்டே உள்துறையை தனக்கு ஒதுக்க வேண்டும் எனக் கறாராகக் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 17, 2026
சிவகங்கை: ATM-ல் கொள்ளை; வடமாநில இளைஞர் கைது

கூத்தாண்டன் கிராமத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்திற்குள் வடமாநில இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். நீண்ட நேரமாக வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள வயர்களை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை.
News March 17, 2026
காஞ்சிபுரம்: தேர்தலை புறக்கணித்த மக்கள்!

கீழ்கதிர்பூர் பகுதியில் பட்டா வழங்காததை கண்டித்து விவசாயிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து நோட்டீஸ் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட காலமாக பட்டா வழங்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதனால் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
News March 17, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறார்.. அதிர்ச்சி

<<19394504>>திமுகவின் சமரச பேச்சுவார்த்தை<<>> தோல்வியடைந்ததால், கூட்டணியிலிருந்து விலக தமிழக வாழ்வுரிமைக் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் தொகுதிகளை கேட்டு விசிக, சிபிஐ, சிபிஎம் ஏற்கெனவே அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், வேல்முருகனின் விலகல் முடிவு என்பது திமுக கூட்டணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?


