News August 25, 2024
பழனி முருகன் மாநாடு.. ஆன்மிகமா – அரசியலா?

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசியல் களம் மாறியுள்ளது. BJPன் இந்துத்துவா கொள்கை இங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் வல்லுநர்கள், இந்து விரோதக் கட்சி என BJP தொடர்ந்து அடையாளப்படுத்துவது தங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என DMK அஞ்சுகிறது. எனவே, தாங்கள் இந்து எதிர்ப்பாளர்கள் அல்ல என நிரூபிப்பதற்காகவே, இம்மாநாட்டை நடத்துவதாக கூறுகின்றனர். CMன் <<13929521>>கருத்தும்<<>> அதற்கு வலுவூட்டுகிறது.
Similar News
News November 25, 2025
நவம்பர் 25: வரலாற்றில் இன்று

*பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women).
*1839 – ஆந்திராவில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியால் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது. 30,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*2016 – பிடல் காஸ்ட்ரோ நினைவுநாள்.
News November 25, 2025
மே.வங்கத்தில் 10 லட்சம் SIR விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தமிழகத்தை போல் மே.வங்கத்திலும் SIR பணிகள் நவ.4 முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7.64 கோடி SIR விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 4.45 கோடி விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ECI தெரிவித்துள்ளது. இவற்றில் 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யவுள்ளதால், நிராகரிப்பு எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளதாம்.
News November 25, 2025
தூத்துக்குடியில் குவியும் பறவைகள் PHOTOS

தூத்துக்குடி கடலோர பகுதிகளில் வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளன. இந்த வருடம் ஏராளமான புலம்பெயர் பறவைகள், மீன், பூச்சிகள் உள்ளிட்ட இரைகளுக்காக குவிந்துள்ளன. இது ஈரநிலங்களில் சுற்றுச்சுழல் மேம்பட்டு இருப்பதை பிரதிபலிக்கிறது. மேலே, பறவைகளில் போட்டோக்களை பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


