News May 27, 2024
பாகிஸ்தானின் ஆதரவு விசாரணைக்குரியது: மோடி

கெஜ்ரிவால் மற்றும் ராகுல் காந்திக்கு பாகிஸ்தானில் இருந்து கிடைக்கும் ஆதரவு விசாரணைக்குரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், நம்முடைய பகைவர்கள், நம்மில் சிலரை மட்டும் விரும்புவதாகவும், ஒரு சிலருக்கு மட்டும் ஆதரவு குரல் எழுப்புவதற்கான காரணம் புரியவில்லை என்றும் சந்தேகம் எழுப்பினார். மேலும், இது கவலைக்குரிய விஷயம் எனத் தெரிவித்தார்.
Similar News
News March 13, 2026
இனி RTI-ல் பொதுத்தேர்வு விடைத்தாளை பெறலாம்!

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை RTI-ன் கீழ் விண்ணப்பித்து பெறலாம் என மாநில தகவல் ஆணையம் (SIC) தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த SIC, RTI கட்டண விதிகளின்படி பக்கத்திற்கு ₹2 செலுத்தி விடைத்தாள் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. விடைத்தாள் பராமரிக்கப்படும் அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றுக்கொள்ளலாமாம்.
News March 13, 2026
ஈரானின் அணு விஞ்ஞானியை கொன்றுவிட்டோம்: இஸ்ரேல்

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி ஒருவரை கொன்றுவிட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது ஈரானின் அணு ஆயுத திட்டத்தையும் பலவீனமாக்கியுள்ளதாகவும், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு குறிப்பிடத்தக்க அடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார். மேலும், இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News March 13, 2026
கூட்டணிக்குள் செல்கிறாரா விஜய்?

வரும் தேர்தலில் தவெக தனித்து களம் காணும் என ஆதவ், CTR நிர்மல் குமார் உள்ளிட்டோா் கூறி வந்தனர். இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தவெகவின் மா.செ.,க்கள் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் தனித்து களம் காணலாமா, கூட்டணியில் சேரலாமா என ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில் தவெகவுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி சேர பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த தகவல் வெளியாகியுள்ளது.


