News April 28, 2025
பயத்தில் நாட்டை விட்டு ஓடும் பாக். தளபதிகள்!

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானை கதிகலங்க செய்துள்ளது. இந்தியாவின் பதிலடி குறித்த அச்சத்தில் அந்நாட்டு முக்கிய ராணுவ தளபதிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். தலைமை தளபதி ஆசிம் முனிர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில், தளபதிகளின் ராஜினாமா குறித்த லெப்டினண்ட் ஜெனரல் உமர் அகமத்தின் கடிதம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பாக். அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
Similar News
News October 24, 2025
இன்று உலக போலியோ தினம்!

கொடிய நோயான போலியோவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 24-ம் தேதி ‘உலக போலியோ தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. வரும் முன் காப்போம் என்பதற்கு இணங்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பது மிகவும் அவசியமானதாகும். ‘Every Child, Every Vaccine, Everywhere, is a call to ensure that no child, in any setting, is left unprotected’ என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள்.
News October 24, 2025
இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இஸ்ரேல் – ஹமாஸ் போரில், டிரம்ப் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில், பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான மேற்கு கரையை, இஸ்ரேல் சட்டப்பூர்வமாக இணைக்க முயன்றால், அமெரிக்காவின் ஆதரவை இழக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். அரபு நாடுகளுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளதால், இஸ்ரேலின் இந்த முயற்சி ஒருபோதும் நிறைவேறாது என குறிப்பிட்டுள்ளார்.
News October 24, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

கடந்த 2 நாளாக தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹11,540-க்கும் சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹ 92,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை உயர்ந்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


