News May 3, 2024
அயோத்திக்கு வரும் பாகிஸ்தான் பக்தர்கள்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து 200 பேர் கொண்ட சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புனிதப் பயணமாக அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று தரிசனம் செய்ய வரவுள்ளனர். பிரயாக்ராஜில் இருந்து அயோத்திக்கு சாலை மார்க்கமாக வரும் அவர்களுக்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Similar News
News January 31, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 597 ▶குறள்: சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு. ▶பொருள்: உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.
News January 31, 2026
துணை முதல்வராக பதவி ஏற்கிறார் அஜித் பவார் மனைவி!

அஜித் பவார் மரணத்தையடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக் கூட்டத்தில் சுனேத்ரா பவார் தலைவராக அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் தலைவர் சகான் புஜ்பால் தெரிவித்துள்ளார். அதனையடுத்து மாலை 5 மணியளவில் அவர் துணை முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
News January 31, 2026
1977-ல் நடந்த வரலாறு 2026-ல் மீண்டும் நடக்கும்: அருண்ராஜ்

தவெக தலைவர் விஜய் ஒரு குளோபல் தமிழ் ஐகான் என அருண்ராஜ் பேசியுள்ளார். NDTV TN கருத்தரங்கில் பேசிய அவர், விஜய் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கிறார் ஆனால், தவெகவிற்கு தற்போது உள்ள ஆதரவு ரசிகர்கள் பட்டாளத்தை விட மிகப்பெரியது என்றும், ஒட்டுமொத்தTN மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே 1977-ல் நடந்த வரலாறு 2026-ல் திரும்பவும் நடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


