News September 28, 2025
அர்ஷ்தீப் சிங் மீது புகார் கொடுக்கும் பாகிஸ்தான்

இந்திய பவுலர் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக பாகிஸ்தான் ICC-ல் புகாரளிக்க முடிவு செய்துள்ளது. IND vs PAK போட்டியின் போது, பாக்., வீரர்கள் துப்பாக்கியால் சுடுவது போன்றும், இந்திய போர் விமானங்களை வீழ்த்தியதை போலவும் சைகை காட்டினர். இதை எதிர்த்து அர்ஷ்தீப் செய்த சைகை வைரலானது. இதனால் தங்களுக்கு ICC 30% அபராதம் விதித்த போல, அர்ஷ்தீப் சிங்கிற்கும் அபராதம் விதிக்க வேண்டும் என பாக்., முயன்று வருகிறது.
Similar News
News September 28, 2025
IND பவுலர்களை சோதிக்கும் பாக்., பேட்ஸ்மென்

பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான், 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளது. ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துடன் போட்டி தொடங்கியதும், முதல் ஓவரை சிறப்பாக வீசிய ஷிவம் துபே, 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால், பாக்., பேட்டிங்கை இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்துவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாக்., அணி கவனமாக விளையாடி வருகிறது. முதல் விக்கெட்டை யார் வீழ்த்துவார்?
News September 28, 2025
ஏற்கெனவே 12,000 பேர் LAYOFF.. இன்னும் தொடருமாம்!

பன்னாட்டு நிறுவனமான Accenture, கடந்த 3 மாதங்களில் உலக அளவில் 12,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் திறன் மேம்பாடு பயிற்சி அளிப்பது சாத்தியமில்லாததால், பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அந்நிறுவனத்தின் AI பயன்பாடு 2 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், வரும் நவம்பர் வரையிலும் இந்த பணி நீக்கம் தொடரும் என கூறப்படுவதால், ஊழியர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
News September 28, 2025
கரூர் துயரம்: பாஜக மனுவை விசாரிக்க மறுப்பு

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பாஜக தாக்கல் செய்த மனுவை விசாரிக்க சென்னை ஐகோர்ட் நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக CBI விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், பொதுநல வழக்காக இருப்பதால், தான் விசாரிக்க இயலாது என ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார் மறுத்துவிட்டார்.