News May 8, 2025

பாக்., ஏவுகணை தாக்குதல்: முறியடித்த இந்திய ராணுவம்

image

இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக நமது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், ஜலந்தர், சண்டிகர், கபூர்தலா, லூதியானா உள்ளிட்ட 15 நகரங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியது. ஆனால், அவை அனைத்து இந்திய வான்பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 10, 2025

பாலும் வாழைப்பழமும் ஏன் நல்லது தெரியுமா?

image

உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து பற்றி கவலையாக இருக்கிறதா? பாலும், வாழைப்பழமும் டிரை பண்ணுங்க. இவை, குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதை எடுத்துக்கொள்வதால், குழந்தைகளுக்கு என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News December 10, 2025

தமிழக பொறுப்பு டிஜிபிக்கு ஆஞ்சியோ சிகிச்சை

image

தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெங்கட்ராமன் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் ஹாஸ்பிடல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

இண்டிகோ விமான சேவை.. 10% வரை குறைக்க உத்தரவு

image

தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் 400க்கும் அதிகமான விமான சேவைகளை இண்டிகோ ரத்து செய்துள்ளது. இந்நிலையில், இண்டிகோ விமான சேவைகளை 10% வரை குறைக்க DGCA உத்தரவிட்டுள்ளது. இது, இண்டிகோ நிறுவனம் தங்களது செயல்பாடுகளை சீராக்கவும், விமான சேவைகள் ரத்து செய்வதை குறைக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இப்பிரச்னையை சரிசெய்திட போர்க்கால அடிப்படையில் செயல்படுவதாக இண்டிகோ CEO கூறியுள்ளார்.

error: Content is protected !!