News May 17, 2024

பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கலாம்.. ஆனால்!!

image

பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும் என காங்., தலைவர் மணிசங்கர் ஐயர் பேசியது சர்ச்சையானது. உ.பி., தேர்தல் பிரசாரத்தில் அதற்கு பதிலளித்துள்ள மோடி, பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருந்தாலும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு தெரியாது என்றும், அதை முறையாக பராமரிக்கக் கூட அவர்களிடம் பணம் இல்லை என்பதை காங்கிரஸ் உணர வேண்டும் எனவும் பதிலளித்துள்ளார்.

Similar News

News December 4, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (03.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 4, 2025

Audio Launch-க்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்ட ‘பராசக்தி’ டீம்

image

பொங்கலுக்கு விஜய்யின் ஜனநாயகனும், சிவகார்த்திகேயனின் பராசக்தியும் மோதுகின்றன. ஏற்கெனவே ஜனநாயகனின் ஆடியோ லான்ச் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி முதல் வாரம் ‘பராசக்தி’ ஆடியோ லான்ச்சுக்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. நிகழ்ச்சியை SK-வின் சொந்த ஊரான திருச்சி அல்லது மதுரையில் நடத்த அவர்கள் பிளான் போட்டு வருகின்றதாக சொல்லப்படுகிறது.

News December 4, 2025

இந்தியா தோல்விக்கு இதுதான் காரணமா?

image

358 ரன்களை குவித்தும் இந்தியா தோல்வியை தழுவியதற்கு பந்துவீச்சு மற்றும் பீல்டிங் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மார்க்ரம் 53 ரன்களில் இருக்கும்போது அவரின் கேட்சை ஜெய்ஸ்வால் தவறவிட்டார். பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க தவறியதோடு, ரன்களையும் வாரி வழங்கினர். அர்ஷ்தீப், ஜடேஜா மட்டுமே SA பேட்டர்களை கொஞ்சம் கட்டுப்படுத்தினர். SA அணியின் பேட்டிங் டெப்த்தையும் இந்தியா கணிக்க தவறிவிட்டது.

error: Content is protected !!