News May 8, 2025
உலகத்தின் முன் நாடகம் போடும் பாகிஸ்தான்..!

பஹல்காம் தாக்குதலின் பதிலடியை தாங்கிக்கொள்ள முடியாத பாகிஸ்தான், உலகம் முன்பு ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது. மரணமடைந்தவர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தானின் ஜனாதிபதி, பிரதமர், ராணுவத் தலைவர் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டனர். நீங்களே, அந்த போட்டோஸை பாருங்க. இந்தியாவிற்கு எப்படி பதிலடி கொடுப்பது என தவிப்பும், பயத்தால்தான் இப்படி ரியாக்ட் செய்கின்றனர் என ட்ரோல்ஸ் பறக்கிறது.
Similar News
News January 2, 2026
BREAKING: பெருந்துறை அருகே பயங்கர விபத்து! 10 பேர் காயம்

பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ட்ராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற லாரியை முந்துகையில் லேசாக உரசவே, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
News January 2, 2026
BREAKING: தங்கம் விலை மிகப்பெரிய மாற்றம்

தங்கம் விலை இன்று (ஜன.2) 22 கேரட் கிராமுக்கு ₹140 உயர்ந்து ₹12,580-க்கும், சவரன் ₹1,120 உயர்ந்து ₹1,00,640-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டின் முதல் நாள் தங்கம் விலை சரிவுடன் தொடங்கிய நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News January 2, 2026
ரகசியங்களை பகிர்ந்த இந்தியா – பாகிஸ்தான்

இந்தியா மற்றும் பாகிஸ்தான், ஒவ்வொரு ஆண்டும் ஜன.1-ம் தேதி தங்களிடம் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என 1988-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. மோதல் ஏற்படும்போது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்க்கும் விதமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், ஒப்பந்தத்தின் படி நேற்று இருநாடுகளும், அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டன.


