News August 13, 2025

பாகிஸ்தான் தான் எங்க கூட்டாளி… USA-வின் மெசேஜ்

image

பாகிஸ்தானில் இயங்கும் BLA அமைப்பு, அதன் ஆயுதப் பிரிவான மஜீத் பிரிகேட் இரண்டையும் பயங்கரவாத அமைப்புகளாக அமெரிக்கா இப்போது அறிவித்தது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது. பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில் இதை அறிவிப்பது, பாகிஸ்தானுக்கு ஆதரவை தெரிவிப்பது மட்டுமல்ல, தனது கூட்டாளி பாக்., தான் என்பதை இந்தியாவுக்கு உணர்த்துவதற்காகவும் தான் என்கின்றனர் சர்வதேச நோக்கர்கள்.

Similar News

News August 13, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 13 – ஆடி 28 ▶ கிழமை: புதன் ▶ நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶ திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.

News August 13, 2025

மனச்சோர்வை போக்க… டிப்ஸ்

image

மனச்சோர்வை உடனே போக்க முடியாது. ஆனால், பின்வரும் செயல்பாடுகள் மூலம் மகிழ்ச்சியை மீட்கலாம்: *மன அழுத்தத்தை குறையுங்கள் *போதுமான அளவு தூங்கவும் *சத்தான, ஆற்றல்தரும் உணவுகளை சாப்பிடுங்கள் *எதிர்மறை எண்ணங்களை தவிருங்கள் *எதையும் தள்ளிப்போடுவதை தவிருங்கள் *அன்றாட வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தவும் *உங்கள் உணர்வுகளை புரிந்து ஆதரவு காட்டுபவர்களுடன் தொடர்பில் இருங்கள் *மனநல கவுன்சலரிடம் ஆலோசனை பெறலாம்.

News August 13, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!