News May 8, 2025
பாகிஸ்தான் பொய் சொல்கிறது: விக்ரம் மிஸ்ரி

இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பொய் சொல்வதாக நம் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் மட்டுமே, பொதுமக்கள் அல்ல என்று கூறிய மிஸ்ரி, தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரவில்லை எனில், அவர்களின் உடல்களுக்கு ஏன் பாக்., அரசு கொடி போர்த்தி மரியாதை தந்தது எனக் கேள்வி எழுப்பினார்.
Similar News
News January 4, 2026
டேஞ்சரில் சச்சினின் ரெக்கார்டு!

ஆஸி.,க்கு எதிரான 5-வது டெஸ்டில் ஜோ ரூட் 65 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் 67-வது அரைசதமாகும். இதன் மூலம், அவர் சச்சினின் மெகா ரெக்கார்டை நெருங்கியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை சச்சின்(68) தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முந்திவிடுவாரா ஜோ ரூட்?
News January 4, 2026
வெனிசுலா புதிய அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்!

<<18758081>>அதிபர் மதுரோ<<>> சிறைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, முறையான ஆட்சிமாற்றம் வரும்வரை வெனிசுலாவை அமெரிக்காவே தற்காலிகமாக நிர்வகிக்கும் என டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை, இடைக்கால அதிபராக நியமித்து, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்(SC) உத்தரவிட்டுள்ளது. நாட்டின் நிர்வாகத்தை தொடரவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக SC தெரிவித்துள்ளது.
News January 4, 2026
தங்கம் விலை சவரன் ₹1,00,800

தங்கம் விலை இன்று (ஜன.4) மாற்றமின்றி காணப்படுகிறது. நேற்று காலை 22 கேரட் கிராமுக்கு ₹60 குறைந்த நிலையில், மாலையில் ₹80 அதிகரித்தது. இதனால் கிராம் ₹12,600-க்கும், சவரன் ₹1,00,800-க்கும் விற்பனையாகிறது. நேற்று தங்கம் உயர்ந்ததால் இன்று குறையும் என எதிர்பார்த்த நிலையில், விலையில் மாற்றம் இல்லாததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


