News October 23, 2024
இந்தியாவை முந்தி முதலிடம் பிடித்த பாகிஸ்தான்

உலகில் அதிக காற்றுமாசு உள்ள நகரங்களின் பட்டியலில், பாகிஸ்தானின் கராச்சி நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இதன் காற்றுமாசு அளவு 232 AQI ஆகவுள்ளது. 2-ம் இடத்தில் நமது தலைநகரமான டெல்லி ( 204 AQI) உள்ளது. டாகர் (செனிகல்), கின்ஹாசா (DPR காங்கோ), டாக்கா (வ.தேசம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும், 9-ம் இடத்தில் கொல்கத்தாவும் (113 AQI) உள்ளன. முதல் சில நூறு இடங்களில் தமிழக நகரங்கள் இல்லை என்பது மகிழ்ச்சி தானே!
Similar News
News January 13, 2026
விழுப்புரம்: பொங்கல் பணம் ரூ.3,000 வரலையா?

உங்களுக்கு இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரலையா? பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என தெரிவித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 என்ற எண்ணில் நீங்கள் புகாரளிக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது பற்றி நீங்கள் மெசேஜ் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஷேர்!
News January 13, 2026
அதிமுக வேட்பாளர் தேர்வில் இபிஎஸ் போடும் பிளான்!

அதிமுகவில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் EPS விறுவிறுப்பாக நேர்காணல் நடத்தி வருகிறார். அதில், தொகுதியில் உள்ள செல்வாக்கு, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா, கடந்த காலங்களில் கட்சிக்காக ஆற்றிய பணி உள்ளிட்டவைகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறாராம். குறிப்பாக, திமுகவின் விமர்சனத்திற்கு ஆளாகாத வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளாராம்.
News January 13, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று(ஜன.13) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹13,170-க்கும், சவரன் ₹400 உயர்ந்து, ₹1,05,360-க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாளில் மட்டும் தங்கம் சுமார் ₹4,560 அதிகரித்துள்ளது. <<18842242>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தாறுமாறாக விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


